செவ்வாய், 8 டிசம்பர், 2020

வேற்றுமை உருபு­­­­­­­­

 

வேற்றுமை:  பெயர்ச்சொல் உருபு­­­­­­­­ என்று வேறுபட்ட பொருளைத் தருவது        வேற்றுமை.

முதல் வேற்றுமை: உருபு இல்லை   (எழுவாய் வேற்றுமை)

பெயர்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் வருவது (உருபு ஏற்காமல்)  முதல் வேற்றுமை.

உதாரணம்:  காவியன் எழுதினான்.

முதல் வேற்றுமையின் வேறு பெயர்கள்:

·         எழுவாய் வேற்றுமை

·         பெயர் வேற்றுமை

·         வினைமுதல் வேற்றுமை

எழுவாய்:  யார், எது, எவை என்ற வினாக்களுக்கு விடையாக வருவது.

உதாரணம் : காவியன் எழுதினான்.  (யார்)

பூனை கத்தியது.                (எது)

மரங்கள் அசைந்தன.     (எவை)

- இதில் பெயர்ச்சொல் எந்த உருபையும் ஏற்கவில்லை.

முதல் வேற்றுமை உணர்த்தி வரும் பொருள்கள்:

§  வினை பயனிலை

§  வினா பயனிலை

§  பெயர் பயனிலை

§  பண்பு பயனிலை

1.       மலர்விழி பாடினாள்.     (வினை பயனிலை)

2.       மலர்விழி யார்?                   (வினா பயனிலை)

3.       அவள்தான் மலர்விழி.      (பெயர் பயனிலை)

4.       மலர்விழி அன்பானவள்.  (பண்பு பயனிலை)

 

இரண்டாம் வேற்றுமை:  செயப்படுபொருள் வேற்றுமை:  உருபு:

பெயர்ச்சொல் "" என்ற உருபை ஏற்று வருவது , இரண்டாம் வேற்றுமை.

உதாரணம்:

காவியன் அம்மாவை அழைத்தான். (வ்+= வை)

அம்மா என்ற பெயர்ச்சொல்என்ற  உருபை  ஏற்று வந்துள்ளது.

 

செயப்படுபொருள்:

யாரை, எதை, எவற்றை என்ற  வினாக்களுக்கு விடையாக வருவது.

காவியன்  வீட்டுப்பாடத்தை எழுதினான். (எதை)

(த்+=தை)

காவியன் அம்மாவை அழைத்தான். (யாரை)

(வ்+=வை)

காவியன் பழங்களைச் சாப்பிட்டான். (எவற்றை)

                    (ள்+=ளை)

இரண்டாம் வேற்றுமை உணர்த்தி வரும் பொருள்கள்:

·         ஆக்கல்     - ஒன்றை உருவாக்குதல்

·         அழித்தல்  - ஒன்றை இல்லாமல் செய்தல்

·         அடைதல்  - ஒன்றை அடைதல்

·         நீக்கல்       - ஒன்றை விட்டு நீங்குதல்/நீக்குதல்

·         ஒத்தல்       - ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிடுதல்

·         உடைமைப் பொருள் - ஒன்றைப் பெற்றிருத்தல்

உதாரணம்:

·         படத்தை வரைந்தான்.(ஆக்கல்)

·         வீட்டை இடித்தான். (அழித்தல்)

·         தாகத்தை நீக்கினான்.(நீக்குதல்)

·         பேருந்தை அடைந்தான்.(அடைதல்)

·         தாயைப் போல பிள்ளை.(ஒத்தல்)

·         அவர் செல்வத்தை உடையவர்.(உடைமை)

 

மூன்றாம் வேற்றுமை:  உருபு : ஆல்

பெயர்ச்சொல் ஆல்  என்னும் உருபு ஏற்று வருவது  மூன்றாம் வேற்றுமை.

உதாரணம்:

·         ஆசிரியரால் பாடம்  கற்பிக்கப்பட்டது.       (ர்+=ரா)

ஆன், ஒடு, ஓடு என்பவையும் மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

பெயர்ச்சொல்  மூன்றாம் வேற்றுமை உறுப்புகளை  ஏற்று பின்வரும் பொருள்களை உணர்த்தி வரும்.

  • கருவி
  • கருத்தா
  • உடனிகழ்வு

கருவி: ஒரு செயலைச் செய்வதற்கு துணைச்செய்வது கருவி.

உதாரணம்:  1. எழுதுகோலினால்  எழுதினான்.

                                   (எழுதுகோல்- கருவி)

                          2. வாயால் பேசினான். (வாய்- கருவி)

கருத்தா: ஒரு செயலை செய்பவரைக் குறிக்கிறது.

உதாரணம்:  1. ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்பட்டது.

                                 (ஆசிரியர்-கருத்தா)

2.அம்மாவால் உணவு சமைக்கப்பட்டது.

                                   (அம்மா-கருத்தா)

உடனிகழ்வு:  ஒரு செயல் நடக்கும் போது, அதனுடனே மற்றொரு  செயல் நிகழ்வதாக அமைவது உடனிகழ்வு.

உதாரணம்: 1. தாயொடு சேயும்  வந்தார்கள். (உடனிகழ்வு)  - ஒடு

                         2.கிளையோடு மரமும் விழுந்தது. (உடனிகழ்வு) - ஓடு

நான்காம் வேற்றுமை : உருபு  கு

பெயர்ச்சொல்லை, கோடற்பொருளாக (கொள்ளுதல் பொருளாக) வேறுபடுத்திக் காட்டுவது நான்காம் வேற்றுமை  ஆகும்.

உணர்த்தி வரும் பொருள்கள்:

·         கொடை

·         பகை

·         நட்பு

·         அதுவதால்

·         பொருட்டு

·         முறை முதலிய பொருள்களில் வரும்.

உதாரணம்:

கொடை:       ஏழைக்கு உதவி செய்தார்.

                        புலவருக்கு பொன்னைக் கொடுத்தார்.

பகை:              பாம்புக்குக்  கீரி  பகை.

                         நெருப்புக்குத்  தண்ணீர்.

நட்பு:                 ரவிக்கு நண்பர் பாபு.

அதுவாதல் : ஆடைக்கு நூல்.

                         பாலுக்குத்  தண்ணீர்.

பொருட்டு:     கூலிக்கு வேலை.

முறை:              குழந்தைக்குத்  தாய்.

                         மகளுக்குத் தந்தை பரிசளித்தார்.

ஐந்தாம் வேற்றுமை: உருபு:  இன், இல் :

பெயர்ச்சொல்லின்  தன்மையை உணர்த்துவது ஐந்தாம் வேற்றுமை ஆகும்.

உணர்த்தி வரும்  பொருள்கள்:

       நீங்கல்(விடுபடுதல்)

       ஒப்பு (ஒப்பிடுதல்)

       எல்லை

       ஏது

நீங்கல் - மலையின் வீழ் அருவி

ஒப்பு     - பாலின் வெண்மையான கொக்கு

காக்கையின் கறுநிற கூந்தல்.

எல்லை - மதுரையின் வடக்கே தில்லை

கோவிலின் கிழக்கே எங்கள் வீடு

ஏது         -   செல்வத்தில் சிறந்தது கல்வி.

 

ஆறாம் வேற்றுமை:  உருபு (அது)

எழுவாய் பொருளை (பெயர்ச்சொல்லை) உரிமை பொருளாக வேற்றுமைப்படுத்துவது ஆகும்.

வேலனது  பசு. (ன்+ =) (அது)

கண்ணனது வீடு. (ன்+ =) (அது)

உணர்த்தி வரும் பொருள்கள்:

·         குணம்

·         உறுப்பு

·         பலவின்

·         கூட்டம்,

·         திரிபின் ஆக்கம்.

உணர்த்தி வரும் பொருள்கள்:

குணம்  - பாலினது வெண்மை.

உறுப்பு -     மரத்தினது  கிளை.

பலவின் கூட்டம் - பறவையினது கூட்டம்.

திரிபின் ஆக்கம் - மஞ்சளது பொடி.

 

ஏழாம் வேற்றுமை: உருபு கண்

பெயர்ச்சொல்லைத் தொடர்புக்கொண்டு வழங்கும் ஒரு இலக்கணக் கூறு. இது  இட வேற்றுமைஎன்றும் வழங்கப்படுகிறது.

உணர்த்தி வரும் பொருள்கள்:

·         பொருள்

·         இடம்

·         காலம்

·         சினை

·         குணம்

·         தொழில்

·         தற்கிழமை (தன்னிலிருந்து பிரிக்க முடியாத தொடர்பு)

·         பிறிதின் கிழமை (பிற பொருளோடு தொடர்பு)

(கிழமை- உரிமை)

பொருள்:  மணியின்கண் ஒலி - தற்கிழமை

மரத்தின்கண் பறவை- பிறிதின் கிழமை

இடம்:          ஊரின்கண் உள்ளது குளம் - தற்கிழமை

வானத்தின்கண் பறந்தது காகம் -  பிறிதின் கிழமை

காலம்:      நாளின்கண் உள்ளது நேரம் - தற்கிழமை

குளிரின்கண் பூப்பது ரோஜா - பிறிதின் கிழமை

சினை:     கையின் கண் உள்ளது விரல் - தற்கிழமை

கையின் கண் உள்ளது வளையல் - பிறிதின் கிழமை

குணம்:     வெண்மையின்கண் உள்ளது தூய்மை- தற்கிழமை

இளமையின்கண் உள்ளது செல்வம் - பிறிதின் கிழமை

தொழில்:  பரதத்தின்கண் உள்ளது அபிநயம் - தற்கிழமை

பாடலின்கண் உள்ளது பரதம் - பிறிதின் கிழமை

எட்டாம் வேற்றுமை : உருபு இல்லை

விளி வேற்றுமை  (விளி - அழைத்தல் அல்லது கூப்பிடுதல் )

தம்பீ வா -  அழைத்தல்

       வேலா வா - அழைத்தல்

1 கருத்து: