சனி, 12 டிசம்பர், 2020

வல்லினம் மிகா இடங்கள்

 வல்லினம் மிகா இடங்கள்:


1. படி என முடியும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.

கேட்கும்படி+ கூறினான்= கேட்கும்படி கூறினான்.

வரும்படி+சொன்னான்= வரும்படிசொன்னான்.

2. இரட்டைக்கிளவி மற்றும் அடுக்குத்தொடரில் வல்லினம் மிகாது.

சல+சல= சல சல

சர + சர= சர சர

 பாடு+ பாடு =பாடு  பாடு

செய் +செய்= செய் செய்

3. எட்டு, பத்து தவிர மற்ற எண்களில் பின் வல்லினம் மிகாது.

ஒன்று+கொடு= ஒன்று கொடு

இரண்டு+ பேர்= இரண்டுபேர்.

4.அவை, இவை, எவை, அன்று, இன்று,என்று என்னும்  சொற்களின் பின் வல்லினம் மிகாது.

அவை+ போயின= அவை போயின.

இன்று+ படித்தான்= இன்று படித்தான்

5. அங்கே, இங்கே, எங்கே என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

அங்கே+ பார்= அங்கே பார்.

எங்கே+ சென்றாய்= எங்கே சென்றாய்

6. , , , யா எனும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.

நீயா+ கூறினாய்= நீயா கூறினாய்.

அவளா + படித்தால்= அவளா படித்தால்

7. சிறிய ,பெரிய  எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

சிறிய+புத்தகம்= சிறிய புத்தகம்

பெரிய+ புத்தகம் = பெரிய புத்தகம்

8. இரண்டாம் வேற்றுமை தொகை மறைந்து வரும் போது  வல்லினம் மிகாது.

தமிழ்+கற்றான்= தமிழ் கற்றான்.

நீர்+குடித்தான்= நீர்குடித்தான்

 9.வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.

வந்தது  + பேருந்து= வந்தது பேருந்து

சென்றன + காகம்= சென்றன காகம்

10. ஈறு கெடாத எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வலி மிகாது.

 ஓடாத + குதிரை = ஓடாத குதிரை

பாடாத+ புலவர் = பாடாத புலவர்.

11. ஆறாம் வேற்றுமை விகுதியில் வலி மிகாது. (அது)

எனது+ கை= எனது கை

அவளது+ புத்தகம் = அவளது புத்தகம்

12. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

 உம்மைத்தொகை: "உம்" என்ற உருபு மறைந்து வருவது உம்மைத்தொகை.

தாய்+தந்தை= தாய்தந்தை

இரவு+பகல் - இரவு பகல்

உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

13.மென் தொடர்  குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது.

 குற்றியலுகரம் : குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.

 பந்து  (த்+உ) - மென்தொடர் குற்றியலுகரம்.

மெல்லின எழுத்துகளை தொடர்ந்து வந்து குறைந்து ஒலிக்கக்கூடிய உகரம்  மென்தொடர் குற்றியலுகரம்.

 உதாரணம்:

 கரும்பு + தின்றான் = கரும்புதின்றான்

 நடந்து+சென்றான் = நடந்துசென்றான்.

 14. வன்தொடர் குற்றியலுகரத்தின் பின்  கள், தல்  விகுதி வரும்போது வல்லினம் மிகாது.  

வன்தொடர் குற்றியலுகரம்:

வல்லின எழுத்துகளை தொடர்ந்து வந்து குறைந்து ஒலிக்கக்கூடிய உகரம்  வன்தொடர் குற்றியலுகரம்.

உதாரணம்: 

சொத்து+ கள்= சொத்துகள்

வாழ்த்து+ கள் = வாழ்த்துகள்

15. விளிப்பெயர்  பின்னும் வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது.

  உதாரணம்:

தம்பீ+ போ = தம்பீ போ

மழையே + செல் = மழையே செல்

வாழ்க +பெரியார் = வாழ்க பெரியார்

வீழ்க +கொடுமை = வீழ்க கொடுமை

16.வல்லின றகர , டகரத்தின் பின் ஒற்று வராது.

 உதாரணம்:

கற்க- கற்க்க

பயிற்சி - பயிற்ச்சி

திராட்சை - திராட்ச்சை

வெட்கம் - வெட்க்கம் 

 17. எழுவாய்த்தொடரிலும், வினைத்தொகையிலும் வல்லினம் மிகாது. 

மாடு+ பாய்ந்தது  = மாடு  பாய்ந்தது 

நாய்+ போனது = நாய் போனது 

கொக்கு+ பறந்தது = கொக்கு பறந்தது. -எழுவாய்த்தொடர்

வள்ளி + படித்தான்= வள்ளி படித்தான் 

விரி+கடல்= விரி கடல் 

ஊறு+காய்= ஊறுகாய் -வினைத்தொகை

18. பெயரெச்சங்கள் பின்னும் , வினையெச்சத்தின் பின்னும் வல்லினம் மிகாது. 

செய்த + பழம்= செய்த பழம் 

நின்ற+ பசு= நின்ற பசு  -பெயரெச்சம்

செய்து+ பார்த்தான்= செய்து பார்த்தான் 

நின்று+ சென்றான்= நின்று சென்றான். -வினையெச்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக