காதல் வாழ்க !
மானுடர் சிலர்
சிதைத்தாலும்
மண்ணில் வேராய்
மனமதை
புதைத்திருக்கும்
மரத்தின்
காதல் வாழ்க !
தென்றல் மெய்ப்பட
பஞ்சு இதழால்
கொஞ்சி சிரிக்கும்
எழில் மலரிடம்
தேனீக்கொள்ளும்
காதல் வாழ்க !
நிமிடத்தில் பலமுறை
கரைதீண்டிச் செல்லும்
நீலக்கடலை
காற்றுடன் கொண்ட
காதல் வாழ்க !
நீலமேக கூட்டத்தில்
நித்தம் மோகம்
தாரகையின்
காதல் வாழ்க !
நாட்கள் பல
நாணத்தால் நின்று
திங்களில் ஓர்முறை
முகம்காட்டும்
திங்களிடம் தங்களின்
காதல் வாழ்க !
கார்மேகம் கண்சிமிட்டி
மழையாய் மண்ணிற்கு
முத்தமிடும் கார்மேக
காதல் வாழ்க !
தன வரவை எதிர்நோக்கும்
வறண்ட ஆற்றிடம்
மழை கொண்ட
காதல் வாழ்க !
இயற்கையின்
காதல் வாழ்க !
இயற்கையை
காதலிக்கும்
காதலர் வாழ்க !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக