திங்கள், 19 நவம்பர், 2018

தாய்மை

அம்மாவென்று 
உனையழைக்க
கருப்பையில் 
உயிர் சுமக்கும்
காலமிது ....

இயல்பாகா
நீயிருக்க
இடையூறு
சிலவரினும்
இன்பமான நிலையிதை
இதயத்தில்
இருத்திவைக்கும்
நேரமிது .....

நின்மொழிதலுக்கு
மெய்யசைக்கும்
மொழியரியா
பிஞ்சின் பஞ்சு  பாதமது
அகத்தே அலைமோதும்
அக்கணம்  அடிவயிற்றில்
கரம்வைத்து கருப்பையில்
நிகழ்பவற்றை
கணிக்கின்ற
காலம் இது ....

உன்னுள்ளிருக்கும்
உயிரது
உன்னுடன் இருக்கும்
தினமதை
தினம் நினைத்து
களிப்புடன்
நாட்கள் கழிக்கின்ற
தருணம் இது ....

பெண்மைக்கு
உரித்தான
உடைமையது
உயிருக்குள்
உயிர்சுமப்பது ...

விலைமதிக்க
முடியா உணர்வது
"அம்மா "

திங்கள், 24 செப்டம்பர், 2018

உவகையில் அழுகை

பொய்யாய் உனை 
கண்டித்த தருணம் 
மெய்யெனக்கருத..

மதி முகத்தின் 
எழில்  மிகுந்தது.. 

மேலிதழ்  அகங்சென்று  
கீழிதழ்  புறந்தள்ள 
  
ஆரத்தழுவிக்கொண்டேன்  
ஆனந்த கண்ணீரோடு,... 

புதன், 5 செப்டம்பர், 2018

"திருமணநாள் வாழ்த்துக்கள் "

மகன் மகளாகி 
மணமக்களான 
அந்நாளின் 
இந்நாளில் 
அசைபோடும் 
இப்பொன்னாள் ..

வண்ணமலர் ஒப்பனையில் 
மணமேடை 
மங்களயிசை முழங்க 
சுற்றங்கள் சூழ்ந்திருக்க 
மன்னவன் கைக்கொண்ட 
மஞ்சள் கயறு 
நெஞ்சில் குடிகொண்ட 
பொன்னாள் ..

கன்னிகை தானமாகி 
கணவர் கரம் பற்ற 
திருமதியான திருநாள் ..

ஆண்டுகள் உருண்டோட 
அகவை உயர்ந்தோட ..

என்றும் பதினாறை 
மனம் சுமக்க 
என்றென்றும் என்னிரண்டு 
பேரோடு ..

மங்களம் நிறைந்த 
மனையோடு 
மகிழ்ச்சி மலர்ந்த 
முகத்தோடு ..

வாழ்க பல்லாண்டு 
வாழ்க்கை  முழுவதும் 
வளமோடு ..

மணநாள்  வாழ்த்துக்கள் 
இருமனம் இணைந்த 
"திருமணநாள் வாழ்த்துக்கள் "

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

விவசாயி

கதிரவன் கண்விழிக்கும் 
காலைவேளை 
வயல்வெளிக்கு  முதல் 
வணக்கம்  நீ சொன்னாய்..

பசியின்றி பல்லுயிரும் 
இப்புவிவாழ 
படைத்தவனுக்கடுத்த 
நிலை நீ கொண்டாய்..

பணப்பயிர் பயிரிட 
பணமின்றி 
வேளாண்கடன் 
வேலையாக 
வாங்கிக்கிளை 
நாடி சென்றாய்..

ஆண்டு வட்டி அச்சுறுத்த 
இயற்கை சீற்றம் எட்டிப்பார்க்க 
எட்டாக்கனியாய்  கனவிருக்க 
மீளாத்துயர் கொண்டாய்..

துயர்தொலையும் 
காலம் வரை 
துயில் தொலைத்த  
உன் இருவிழிகள்.. 

இன்னலில் இடிபட்டு 
இருளில் அடைபடாதே.. 

பகலவன் பார்க்க 
இருள் விலகும் 
படைத்தவன் பார்க்க 
அருள் விளையும் .. 

தோள் துடைத்தெழுந்து 
மார்தட்டிச்சொல் 
ஏர் தூக்கும் விவசாயி  
நான் என்று.. 


வியாழன், 30 ஆகஸ்ட், 2018

நீ சுவாசமா? சூறாவளியா?

படைத்தவன்  பிறப்பிக்கும் 
பிறப்புக்கள் இறப்பிக்கும் 
வரை பிராணவாயுவை 
நீ தந்தாய் !

பணிக்களைப்பில்  
இளைப்பாற 
பணிக்கு சொத்தான
முத்தான நீர்துளியை 
தட்டிப்பறிக்கும் 
முல்லை மணம் புணர்ந்த 
தென்றலாய்  நீ வந்தாய்! 

நின் கட்டளைக்கு
கட்டுப்பட்டு மரம் 
தலையசைத்தாடா 
கண்ணில் மண்ணூற  
மெய்யிலுன்  உணர்வூற 
மெய்தீண்டிய உன்னை 
கைதீண்டா காற்றாய்  
நீ இருந்தாய் !

நிலையில்லா 
அலைகொண்ட 
நீலக்கடல்  ..
வாரிசுகளை இழந்த 
வனமகள் ..
மரக்கிளை தோரணத்தில்
மறைந்திருந்த வீடுகள் ..
உன் பசிக்கு உணவாக்க 
சூறாவளியாய் 
நீ வந்தாய் !

சுவாசம் தொடங்கி 
சூறாவளி வரை
நின் பணி கண்டு 
வியக்க இப்பாவின் 
சீர்  அடியை 
நீ தந்தாய் !

நீ சுவாசமா? சூறாவளியா?

இப்படிக்கு விளைநிலம்

ஏர் கலப்பை  எனக்களித்த 
எண்ணற்ற காயங்கள் 
என் நிலைமாற்ற 
நீர்பாய்ச்சி இரணமாற்ற 
மனமகிழ்ந்தேன் ..

விளைபொருள் 
சிலயிட்டு 
விளைந்தபொருள்  
பலபெற்றாய்.. 

தீக்கிரையாகியும் 
தீமைபயக்கும் 
மட்காத நெகிழிப்பை 
நின்பயன்பாட்டில் 
என் மெய்தீண்ட 
தரம் குறைந்தேன் ..

மரம் பல அழிக்கப்பட 
மழை பொய்த்துப்போக 
ஊறா கிணற்றடி நீர் 
உதவாமல் எனையாக்க 
தரிசாக
நிலை மாறினேன் ..

தவறிழைத்த நீ 
தண்டனை 
எனக்களித்து  
வேண்டாமென 
விடைகொடுத்தாய் 
வீடானேன் ..




x

திங்கள், 30 ஜூலை, 2018

பேதை பெண் போதை கண்

பேதை பெண்ணினத்தை 
போதை கண்கொண்டு 
                                பார்பவனே

வளரும் மொட்டுக்களை
வதம் செய்யும்  வனவிலங்கே

பள்ளி செல்லும் இளம்பிஞ்சுகளை 
பறித்துண்ணும் பாழினமே

மாமாவென்றுனை  அழைத்த 
பெதும்பைக்கு மரண பரிசா ?? 

அன்னைமொழி சுமப்போம்

அந்நிய மொழியாம் 
"ஆங்கிலத்தை "
அரைகுறையாய் 
பேசுவதை நாகரீகத்தின் 
வளர்ச்சியென்றோம்...

செம்மொழியான
நம் தாய்மொழியாம்   
"தமிழை "
சிந்தையிலிருந்த 
மறந்தோம்...

மழலைமொழி மாறாத 
நம் மக்கள் 
அந்நிய  மொழி கற்க 
ஆர்வம் கொண்டோம் ...

ஆசியா  தொடங்கி 
அண்டார்டிக்கா வரை 
சென்றாலும் நாம் 
சிரிப்பதும்  சிந்திப்பதும்  
நம் தாய்மொழியில் 
என்பதை எண்ண மறந்தோம் ...

நாகரீக வளர்ச்சியில் 
நாமும் பயணிப்போம் 
அந்நியமொழி சுவைத்தாலும்  
அன்னைமொழியை 
சுமத்தவர்களாய் .....
"வாழ்க தமிழ் "       

சனி, 28 ஜூலை, 2018

உயிர் மூச்சு


காற்று

" காற்று"
உலக உயிர்கள்
சுவாசிப்பது 
உன்னால்

முற்றியஇலை தன்
பற்றினை  முறித்து
மண்ணிற்கு
முத்தமிடுவது
உன்னால்

முத்தமிட்ட இலை
மீட்டிய இசையில்
ஆல் விழுது  ஆடுவது
உன்னால்

அகன்ற   ஆழியின்
அலைகள்   உன்னால்

நான்  இப்பாவை
படைத்தும்   உன்னால்


சனி, 16 ஜூன், 2018

தியாகம்


வறுமை


வெற்றி

மனமென்னும் 
கோவிலில் 
குறிக்கோள் என்ற 
                    கற்களில் வடித்த 
நோக்கமென்னும் 
 தெய்வத்தை 
முயற்சி  மலர்களால்  
பூஜிக்க  வெற்றி 
தரிசனம்  கிடைக்கும் 


முயற்சி

முடியாது  என்பதை  
 முறியடித்து 
முடியம்  என  நீ 
 நினைக்கும் 
ஒவ்வொரு  கணமும்  
வெற்றி 
கொள்கிறாய்   
x

வலி



நீச்சல்