படைத்தவன் பிறப்பிக்கும்
பிறப்புக்கள் இறப்பிக்கும்
வரை பிராணவாயுவை
நீ தந்தாய் !
பணிக்களைப்பில்
இளைப்பாற
பணிக்கு சொத்தான
முத்தான நீர்துளியை
தட்டிப்பறிக்கும்
முல்லை மணம் புணர்ந்த
தென்றலாய் நீ வந்தாய்!
நின் கட்டளைக்கு
கட்டுப்பட்டு மரம்
கட்டுப்பட்டு மரம்
தலையசைத்தாடா
கண்ணில் மண்ணூற
மெய்யிலுன் உணர்வூற
மெய்தீண்டிய உன்னை
கைதீண்டா காற்றாய்
நீ இருந்தாய் !
நிலையில்லா
அலைகொண்ட
நீலக்கடல் ..
வாரிசுகளை இழந்த
வனமகள் ..
மரக்கிளை தோரணத்தில்
மறைந்திருந்த வீடுகள் ..
உன் பசிக்கு உணவாக்க
சூறாவளியாய்
நீ வந்தாய் !
சுவாசம் தொடங்கி
சூறாவளி வரை
நின் பணி கண்டு
வியக்க இப்பாவின்
சீர் அடியை
நீ தந்தாய் !
நீ சுவாசமா? சூறாவளியா?
நீ சுவாசமா? சூறாவளியா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக