வாக்கிய வகைகள் அறிதல்
சொற்கள் தொடர்ந்து நின்று ஒரு கருத்தை வெளிப்படுத்துமானால் அது வாக்கியம் எனப்படும்.
கருத்து அடிப்படையிலும்,
அமைப்பு அடிப்படையிலும்
வினை அடிப்படையிலும் மூன்று வகைகளாக அமைகின்றன.
I. கருத்து அடிப்படியில் அமைந்த வாக்கியங்கள் :
- 2. கட்டளை வாக்கியம்
- 3. உணர்ச்சி வாக்கியம்
- 4. வினா வாக்கியம்
ஒரு செய்தியை தெளிவாக கூறும் வகையில் அமைந்த வாக்கியம் செய்தி வாக்கியம் ஆகும்.
உதாரணம்: உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.
ஒருவர்க்கு ஒரு கட்டளை விடுவதாக அமைந்திருக்கும் , வேர்ச்சொல்லைக் கொண்டு கொண்டு முடிந்து இருக்கும் வாக்கியம் கட்டளை வாக்கியம்
உதாரணம்: உடற்பயிற்சி செய்.
நீ நன்றாக படி .
3. உணர்ச்சி வாக்கியம்:
நமக்கு ஏற்படுகின்ற உவகை, அவலம், வியப்பு , அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமையும் வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்.
ஆச்சரியக்குறி (!)இடம் பெற்றிருக்கும்.
இந்த வாக்கியத்தில் ஆ, என்ன , என்னோ , அந்தோ,
ஆகா போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
உதாரணம் :
ஆகா ! என்ன வானவில்லின் அழகு.
ஆ! தமிழக மக்கள் அனைவரும் எழுத்தறிவு பெற்றனரே.
4. வினா வாக்கியம்
வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம். இவ்வகை வாக்கியங்களில் வினாக்குறி இருக்கும். வினா பொருளை உணர்த்தும் எழுத்துகளும் வரும்.
வினா பொருளை உணர்த்திடும் எழுத்துகள் : ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.
உதாரணம் :
இது சென்னைக்கு செல்லும் வழியா?
நீ மனிதனா? - ஆ
நீ தானே? - ஏ
உளரோ? - ஓ
- தனி வாக்கியம்
- தொடர் வாக்கியம்
- கலவை வாக்கியம்
1. தனி வாக்கியம் :
தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும்.
உதாரணம்:
மலர்விழியும், கயல்விழியும் வரைந்தனர்.(
ஒரு எழுவாய் ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்று வரும் வாக்கியம் ஆகும்.
உதாரணம்:
கண்ணன் நன்கு படித்தான்; வெற்றி பெற்றான்; பரிசு பெற்றான்.
கீதா படம் வரைந்தாள்; வண்ணம் தீட்டினாள்; போட்டியில் வென்றாள்.
ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல துணை (சார்பு)
வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்.
என்னும், என்றும் , ஓ, ஆல் என்ற இணைப்புச் சொற்கள் வரும்.
திருக்குறளை ஆழ்ந்து படித்து, அதன் படி நடந்து , வாழ்க்கையில் முன்னேற
அனைவரும் முயல வேண்டும்.
III. வினை அடிப்படியில் அமைந்த வாக்கியங்கள் - 3
- உடன்பாட்டு / எதிர்மறை வாக்கியம்
- செய்வினை / செயப்பாட்டு வினை வாக்கியம்
- தன்வினை / பிறவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்:
செயப்பாட்டுவினை வாக்கியம்:
கதை பாட்டியால் கூறப்பட்டது.
செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுவது எப்படி?
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினர். (செய்வினை வாக்கிம்)
எழுவாய் செயப்படுபொருள் பயனிலை
படி 1: செயப்படுபொருளில் உள்ள ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை எழுத்தை நீக்க வேண்டும். (ள் +ஐ = ளை)
திருக்குறள்
படி 2: செயப்படுபொருளை எழுவாக மாற்ற வேண்டும்.
திருக்குறள்
படி3: எழுவாயை செயப்படுபொருளாக மாற்றி அதனுடன் ஆல் என்ற விகுதியை சேர்க்க வேண்டும். (ர்+ஆல் - ரால்)
திருக்குறள் திருவள்ளுவரால்
படி 4: பயனிலையோடு படு, பட்டது என்ற விகுதிகளை சேர்த்து எழுத வேண்டும்.
திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது.
(செயப்பாட்டுவினை வாக்கியம்)
தன்வினை வாக்கியம்:
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
உதாரணம்:
தாய் உணவை உண்டாள்.
கலையரசி பாடம் கற்றாள
பிறவினை வாக்கியம்:
ஒரு எழுவாய், ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால், அது பிறவினை வாக்கியம் ஆகும்.
உதாரணம்:
தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.
கலையரசி பாடம் கற்பித்தாள்.
விதி1: தன்வினை பகுதியில் உள்ள மெல்லின மெய்யை , வல்லின மெய்யாக மாற்ற வேண்டும்.
திருந்தினான் - திருத்தினான்
விதி 2: தன்வினை பகுதியிலுள்ள வல்லின மெய் இரட்டித்து வரும்.
ஓடினான் - ஓட்டினான் (பகுதி -ஓடு - ஓட்ட )
விதி :3 தன்வினை பகுதிகளுடன் வி, பி என்னும் விகுதிகளில் ஒன்று சேர்ந்து வரும்.
தேடினான் - தேடுவித்தான் (பகுதி : தேடு)
உண்டாள் - உண்பித்தாள் (பகுதி: உண்)
விதி:4 தன்வினை பகுதிகளுடன் கு, சு, டு, து, பு, று என்னும் விகுதிகளில் ஒன்று சேர்ந்து வரும்.
போனான்- போக்கினான்
உதாரணம்:
தன்வினை – பிறவினை
ஆடினாள் – ஆட்டுவித்தாள்
திருந்தினான் – திருத்தினான்
தேடினான் – தேடுவித்தான்
பயின்றான் – பயிற்றுவித்தான்
ஒருவர் கூறிய செய்தியை அப்படியே பொருள் மாறாமல் அவர் கூறியபடியே கூறுவது நேர்க்கூற்று.
நேர்க்கூற்று வாக்கியத்தில் இரட்டை மேற்கொள் குறியீடு (" ") இட வேண்டும்.
தன்மை , முன்னிலை, படர்க்கை இடங்களில் வரும்.
உதாரணம்:
"நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று செல்வி தோழியிடம் கூறினாள்.
அயற்கூற்று வாக்கியம்:
ஒருவர் கூறிய செய்தியை அப்படியே கூறாமல் , அயலார்(மற்றவர்) கூறுவது போல கூறுவது அயற்கூற்று வாக்கியம்.
அயற்கூற்று வாக்கியத்தில் மேற்கோள் குறியீடு இடம்பெறாது.
உதாரணம்:
தான் புத்தகம் கொண்டு வருவதாக செல்வி தோழியிடம் கூறினாள்.
நேர்க்கூற்று அயற்கூற்று
இது, இவை, இன்று அது, அவை, அன்று
இப்பொழுது, இதனால் அப்பொழுது அதனால்
நாளை மறுநாள்
நேற்று முன்னாள்
நான், நாம், நாங்கள் தான், தாம்,தாங்கள்
நீ அவன், அவள்
மாலதி மாலை தொடுத்தாள்
பதிலளிநீக்குஇவ்வாக்கியம் செய்வினை யா? தன்வினையா?