வெள்ளி, 18 செப்டம்பர், 2020

எச்சவினை (அ) எச்சம்:

எச்சவினை () எச்சம்:

தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமைப்  பெறாமல் குறைந்து நிற்பதை "எச்சம்" எனும் சொல்லால் குறிக்கப்படுகின்றன.

              எஞ்சு பொருட் கிளவி தொல்காப்பியம்.

              பொருள்: எஞ்சிய, அதாவது சொல்லாமற் குறைபட்ட

                                       பொருளைக் குறிக்கும்  சொல்.

வகைகள் :

·         பெயரெச்சம்

·         வினையெச்சம்

பெயரெச்சம்:

பெயர்ச்சொல்லை  ஏற்று முடிவுறும் எச்ச(முடிவுறா) வினைச்சொல் ஆகும்.  காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் "தெரிநிலை பெயரெச்சம்" ஆகும்.

                           (எ.கா) படித்த மாணவன்.

   படிக்கின்ற மாணவன்.

   படிக்கும் மாணவன்.

இவ்வாறு காலத்தையும், செயலையும் தெளிவாக உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லை(மாணவன்), கொண்டு முடிவுற்றதால் இது "தெரிநிலை பெயரெச்சம்" ஆகும்.

குறிப்பு பெயரெச்சம் : காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்ச(முடிவுறா) சொல் குறிப்புப் பெயரெச்சம்.

(எ.கா) நல்ல மாணவன்.

               அழகிய மலர்.

நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ, ­­­­­­­­­­­­­­­­­­­--­­­­­­­­­­­­­­­­­­­செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது.  காலத்தினை வெளிப்படையாக  உணர்த்தாமல், குறிப்பினால் மட்டுமே உணர்த்துவதால் "குறிப்பு  பெயரெச்சம்".

              வினையெச்சம்:

வினையெச்சம் என்பது வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் ஆகும்.

தெரிநிலை வினையெச்சம்:

காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினை சொல் தெரிநிலை வினையெச்சம்.

(எ.கா) படித்துத் தேறினான்.

                பறந்து சென்றன.

குறிப்பு வினையெச்சம்:

காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி, வினைமுற்றினை கொண்டுமுடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம். 

                   (எ.கா) மெல்ல நடந்தான்.

                  பணம் இன்றி வாடினான்.

Simple Line Border Clipart Panda Free Clipart Images - Border Corner                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக