இடைச்சொல்: இடைச்சொல் என்பது தனித்து நின்று
பொருள் தராது. பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும்.
இவை
நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்தவும், உணர்ச்சிகளை,
கருத்துகளை மிகத்தெளிவாகவும், சுருக்கமான முறையில்
வெளிப்படுத்த பயன்படுகிறது.
பின்வரும்
நான்கும் இடைச்சொற்களாக வருகின்றன.
* வேற்றுமை உருபுகள்
* விகுதிகள்
*இடைநிலை
*சாரியை
வேற்றுமை உருபுகள்: முதலாம் மற்றும் எட்டாம் வேற்றுமை
தவிரத்த ஆறு வேற்றுமை உருபுகள்.
'பெயரே ஐ ஆல் கு இன் அது
கண்
விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை'
என்கிறார் – நன்னூலார்.
1. முதல்
வேற்றுமை உருபு இல்லை.
(செயப்படுபொருள் வேற்றுமை)
2. இரண்டாம் வேற்றுமை உருபு : ஐ
3. மூன்றாம்
வேற்றுமை உருபு : ஆல்
4. நான்காம் வேற்றுமை உருபு : கு
5. ஐந்தாம் வேற்றுமை உருபு : இன்
6. ஆறாம் வேற்றுமை உருபு
: அது
7. ஏழாம் வேற்றுமை உருபு
: கண்
8. எட்டாம் வேற்றுமை : விளி வேற்றுமை
சில உதாரணம்:
முதல் வேற்றுமை : முதல் வேற்றுமை உருபு இல்லை. இது எழுவாய் வேற்றுமை எனப்படும்.
உதாரணம்: கனிமொழி பாடினாள்.
-
இதில் பெயர்ச்சொல் எழுவாயாக உள்ளது.
இது எவ்வகை மாற்றமும் அடையவில்லை. இது
எழுவாய் வேற்றுமை.
இரண்டாம் வேற்றுமை:
உதாரணம்: கவிதா பார்த்தாள்.
கவிதாவைப் பார்த்தாள்.
-
இதில் முதல் வாக்கியத்திற்கும் ,
இரண்டாம் வாக்கியத்திற்கும்
பொருள் மாறுபடுகின்றது.
மூன்றாம் வேற்றுமை:
உதாரணம்: வாள் வெட்டினான்.
வாளால் வெட்டினான்.
-
இதில் முதல் வாக்கியத்திற்கும் ,
இரண்டாம் வாக்கியத்திற்கும்
பொருள் மாறுபடுகின்றது.
நான்காம் வேற்றுமை:
உதாரணம்: கூலி வேலை செய்தார்.
கூலிக்கு வேலை செய்தார்.
-
இதில் முதல் வாக்கியத்திற்கும் ,
இரண்டாம் வாக்கியத்திற்கும்
பொருள் மாறுபடுகின்றது.
ஐந்தாம் வேற்றுமை:
உதாரணம்: மதுரையின் மேற்கு கோவை.
மலையின் வீழ் அருவி.
ஆறாம் வேற்றுமை:
உதாரணம்: கண்ணன் வீடு
கண்ணனது வீடு.
இதில்
முதல் வாக்கியத்திற்கும் , இரண்டாம் வாக்கியத்திற்கும் பொருள் மாறுபடாது
அது என்னும் இடைச்சொல் வந்துள்ளது.
ஏழாம் வேற்றுமை:
உதாரணம்: பள்ளியின் கண் கல்வி பயில்.
தமிழின் கண் இனிமை உண்டு.
எட்டாம்
வேற்றுமை:
உதாரணம்: வேலா, வா!
தம்பீ .. ..
-
இதில் விளி என்னும் (விளி- அழைத்தல்)
இடைச்சொல் வந்துள்ளது.
விகுதிகள்: ஆன்
ஆள், அள், உம், து, கள் , ஏன்,தல் போன்றன வரும்.
உதாரணம்:
·
தம்பி வந்தான்.
·
மலர்விழி வந்தாள்.
·
பூனை வந்தது.
·
நான் பேசினேன்.
·
நன்றாக பேசுதல்.
இடைநிலை:
இறந்தகால
இடைநிலை: த், ட், ற், ன்.
உதாரணம்:
·
பாடம் படித்தேன்.
·
பாடல் கற்றேன்.
·
அவன் வந்தான்.
நிகழ்கால
இடைநிலை: கிறு , கின்று, ஆநின்று.
உதாரணம்:
·
பாப்பா அழுகிறது.
·
நான் படிக்கிறேன்.
·
அவர்கள் படிக்கின்றார்கள்.
எதிர்கால இடைநிலை: ப், வ்.
உதாரணம்:
·
பாடம் படிப்பேன்.
·
நாளைச் செய்வேன்.
சாரியை: அன் ,அம், அத்து, அற்று,
இன் முதலியன சாரியை .
மரத்தை = மரம்+
அத்து+ஐ
சிலவற்றை = சில+
அற்று+ஐ
புளியங்காய்=
புலி+அம் +காய்
வந்தான்= வா+த்
ந் +அன்+அன்
தத்தம் பொருள் உணர்த்திவரும்
இடைச்சொற்கள் ஏ, ஓ, உம்,
தோறும், தான், என,
என்று போன்ற சாரியையும் நாம் பயன்படுத்துகிறோம்.