சனி, 27 ஜூன், 2020

சொல் இலக்கணம்


சொல் இலக்கணம்
ஓர்  எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ  பொருள் தருவது சொல் இலக்கணம் எனப்படும்.
 உதாரணம்: வீடு, கண், போ, வா.
வகைகள்:
Ø  பெயர்ச்சொல்
Ø  வினைச்சொல்
Ø  இடைச்சொல்
Ø  உரிச்சொல்
      1.பெயர்ச்சொல்:   ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல்.
                            உதாரணம்: தமிழ்ச்செல்வி, மாம்பழம், எழுதுகோல்.

       2. வினைச்சொல்: ஒரு பொருளின் வினையை உணர்த்துவது        வினைச்சொல். (வினை= செயல்)
                            உதாரணம்:  1. மயில் ஆடியது.
                                                           2.மங்கை பாடினாள்.
                                                   -  இதில் ஆடியது என்பது வினைச்சொல்.
                                           பாடினாள்  என்பது வினைச்சொல்.

 3.இடைச்சொல்:  இடைச்சொல் என்பது தனித்து நின்று
 பொருள் தராது. பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்தவும்,                         உணர்ச்சிகளையும் , கருத்துகளையும்  மிகத்தெளிவாக
 கூறவும் பயன்படுகின்றன.
                     உதாரணம்: கவிதா பார்த்தாள்.
                                              கவிதாவைப் பார்த்தாள்.
                       
4.உரிச்சொல்:   உரிச்சொல் என்பது ஒன்றுக்கு ஒன்று
உரிமை உடையாத விளங்கும் சொல் ஆகும்.இது, பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயர்க்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.

பெயர்ச்சொல் : 

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல். பொருள்இடம்காலம்சினைகுணம்தொழில் என்னும் ஆறின்  அடிப்படையில் பெயர்ச்சொல் தோன்றும்.
வகைகள்:
·         பொருட்பெயர்
·         இடப்பெயர்
·         காலப்பெயர்
·         சினைப்பெயர்
·         பண்புப் பெயர்
·         தொழிற்பெயர்

பொருட்பெயர்: பொருளின் பெயர்க்கு ஆகிவருவது பொருட்பெயர்.
            (எ.கா) உயர்திணைப் பொருட்பெயர்: முத்துவள்ளி.
                            
                  அஃறிணைப் பொருட்பெயர்:  பசுபுத்தகம்நாற்காலி.                      
இடப்பெயர்: இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர்.

           (எ.கா) பொது இடப்பெயர்: மாநகரம்கோவில்.
                           சிறப்பு இடப்பெயர்: சென்னைவிஷ்ணு கோவில்.

காலப்பெயர்: காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர்.

           (எ.கா) பொது காலப்பெயர்: மாதம்ஆண்டு.
                           சிறப்பு காலப்பெயர்: சித்திரைவிபவ.


சினைப்பெயர்: சினை  என்றால் "உறுப்பு". பொருட்களின் சினையைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர்.

                          (எ.கா) உயர்திணைச் சினைப்பெயர்: கைகண்.
                                         அஃறிணைச் சினைப்பெயர்: இலைவேர்.
                         
பண்பு(அ)குணப்பெயர்: பொருட்களின் தன்மையைக்
குறிக்கும் சொல் பண்புப் பெயர்.
                    (எ.கா)
நீலம்              -   நிறமாகிய பண்பு
மென்மை    - தன்மையாகிய பண்பு
புளிப்பு          - சுவையாகிய பண்பு

தொழிற்பெயர்:  ஒருவரின் தொழிலை குறிக்கும் பெயர் தொழிப்பெயர்.  தொழிற்பெயர் பெரும்பாலும் தல்” விகுதி
பெற்றே வரும்.
                   (எ.கா)   உழுதல்ஓடுதல்பயிரிடுதல்.

 வினைச்சொல்: 

வினைச்சொல் என்பது ஒரு பொருளின்/ஒன்றன் வினையை உணர்த்துவதாகும்.
v  முடிவு பெற்ற வினைச்சொல் "முற்று" எனப்படும்.
v  முடிவுறாத வினைச்சொல் "எச்சம்" எனப்படும்.
முற்று: செயல் முற்றுப்  பெற்றதைக் குறிக்கும் வினைச்சொல் முற்று.
v  தெரிநிலை வினைமுற்று
v  குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று:

                           "ஓவியர் ஓவியம் தீட்டினார்".
இத்தொடரில் "ஓவியன்" என்பது உயர்திணை என்றும், அவர் "ஆண்பால்"-என்பதும்,"இறந்தகாலம்"- என்பதும் தெளிவாகத்  தெரிகிறது.
மேலும்,
§  செய்பவன்               - ஓவியன்
§  கருவி                           - தூரிகை வண்ணம்
§  நிலம்                            -  சுவர்(அ)திரைச்சீலை(அ)காகிதம்
§  செயல்                         - தீட்டுதல்
§  செயல்பொருள்     - ஓவியம்
§  காலம்                          - இறந்த காலம்
                 இவ்வாறு செய்வபன் , கருவி, நிலம், செயல், செயல்பொருள்,
                காலம், இவற்றை தெளிவாக உணர்த்துவது
                தெரிநிலை வினைமுற்று.                         


குறிப்பு வினைமுற்று:

திணை,பால், மட்டுமே வெளிப்படையாக காட்டுவது குறிப்பு வினைமுற்று. இதில் காலம் குறிப்பாக வரும்.
             (எ.கா) "எழிலன் இனியன்"
  -  இதில் இனியன் என்பது குறிப்பு வினைமுற்று.
தொழில்காலம் வெளிப்படையாக காட்டப்படவில்லை.
இனிய பண்பை உடையவனாக இருந்தான், இருக்கிறான்,
இருப்பான் எனக் குறிப்பால் காலத்தை உணர்த்துகிறது.
இவ்வாறு செய்பவனை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி, பிறவற்றைக்  குறிப்பாக  உணர்த்தும்
            வினைக்குற்று குறிப்பு வினைமுற்று ஆகும்.  அறுவகை
             பெயர்களின் அடிப்படையில் குறிப்பு வினைமுற்று  வரும்.               
அவை பின்வருமாறு,
புகழேந்தி பொன்னன்                         - பொருள்
அங்கையற்கன்னி மதுரையாள்     - இடம்
செல்வி திருவாதிரையாள்                 - காலம்
               வள்ளல் செங்கண்ணன்                    - சினை
              எழிலன் இனியன்                                 - பண்பு
              அகிலன் நடிகன்                                     - தொழில்



எச்சவினை () எச்சம்:

தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமைப்  பெறாமல் குறைந்து நிற்பதை "எச்சம்" எனும் சொல்லால் குறிக்கப்படுகின்றன.
              “எஞ்சு பொருட் கிளவி தொல்காப்பியம்.

              பொருள்: எஞ்சிய, அதாவது சொல்லாமற் குறைபட்ட
                                       பொருளைக் குறிக்கும்  சொல்.
வகைகள் :
·         பெயரெச்சம்
·         வினையெச்சம்

பெயரெச்சம்:

பெயர்ச்சொல்லை  ஏற்று முடிவுறும் எச்ச(முடிவுறா) வினைச்சொல் ஆகும்.  காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் "தெரிநிலை பெயரெச்சம்" ஆகும்.
                           (எ.கா) படித்த மாணவன்.
   படிக்கின்ற மாணவன்.
   படிக்கும் மாணவன்.
இவ்வாறு காலத்தையும், செயலையும் தெளிவாக உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லை(மாணவன்), கொண்டு முடிவுற்றதால் இது "தெரிநிலை பெயரெச்சம்" ஆகும்.


 குறிப்பு பெயரெச்சம் : காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்ச(முடிவுறா) சொல் குறிப்புப் பெயரெச்சம்.
(எ.கா) நல்ல மாணவன்.
               அழகிய மலர்.
நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது.  காலத்தினை வெளிப்படையாக  உணர்த்தாமல், குறிப்பினால் மட்டுமே உணர்த்துவதால் "குறிப்பு  பெயரெச்சம்".
              வினையெச்சம்:
வினையெச்சம் என்பது வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் ஆகும்.
தெரிநிலை வினையெச்சம்:
காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினை சொல் தெரிநிலை வினையெச்சம்.
(எ.கா) படித்துத் தேறினான்.
                பறந்து சென்றன.
குறிப்பு வினையெச்சம்:
காலத்தை விழிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி, வினைமுற்றினை கொண்டுமுடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினைச்சொல்
                   (எ.கா) மெல்ல நடந்தான்.
                  பணம் இன்றி வாடினான்.

                                              இடைச்சொல்: 
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது. பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை  விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும்.
இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்தவும், உணர்ச்சிகளை, கருத்துகளை மிகத்தெளிவாகவும், சுருக்கமான  முறையில்  வெளிப்படுத்த பயன்படுகிறது.
பின்வரும் நான்கும் இடைச்சொற்களாக வருகின்றன.   
* வேற்றுமை உருபுகள்
* விகுதிகள்
*இடைநிலை
*சாரியை
வேற்றுமை உருபுகள்: முதலாம் மற்றும் எட்டாம் வேற்றுமை தவிரத்த ஆறு வேற்றுமை உருபுகள்.
'பெயரே ஐ ஆல் கு இன் அது
கண் விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை'
 என்கிறார் – நன்னூலார்.

                1. முதல் வேற்றுமை உருபு இல்லை. (செயப்படுபொருள் வேற்றுமை)
                2.  இரண்டாம் வேற்றுமை உருபு   :
               3. மூன்றாம் வேற்றுமை உருபு      :  ஆல்
4.  நான்காம் வேற்றுமை உருபு       :   கு
5. ஐந்தாம் வேற்றுமை உருபு            :    இன்
6.  ஆறாம் வேற்றுமை உருபு            :    அது
7.  ஏழாம் வேற்றுமை உருபு              :    கண்
8.  எட்டாம் வேற்றுமை                        :      விளி வேற்றுமை

                                                                                                                                                                

சில உதாரணம்:
முதல் வேற்றுமை : முதல் வேற்றுமை உருபு இல்லை. இது எழுவாய் வேற்றுமை எனப்படும்.
                             உதாரணம்: கனிமொழி பாடினாள்.
-          இதில் பெயர்ச்சொல் எழுவாயாக உள்ளது. இது எவ்வகை மாற்றமும்  அடையவில்லை. இது எழுவாய் வேற்றுமை.
     இரண்டாம் வேற்றுமை:
உதாரணம்:  கவிதா பார்த்தாள்.
                              கவிதாவைப் பார்த்தாள்.
-          இதில் முதல் வாக்கியத்திற்கும் , இரண்டாம்  வாக்கியத்திற்கும் பொருள் மாறுபடுகின்றது.
மூன்றாம் வேற்றுமை:
உதாரணம்:   வாள்  வெட்டினான்.
                               வாளால் வெட்டினான்.
-          இதில் முதல் வாக்கியத்திற்கும் , இரண்டாம்  வாக்கியத்திற்கும் பொருள் மாறுபடுகின்றது.
நான்காம் வேற்றுமை:
                            உதாரணம்:   கூலி வேலை செய்தார்.
                                கூலிக்கு வேலை செய்தார்.
-          இதில் முதல் வாக்கியத்திற்கும் , இரண்டாம்  வாக்கியத்திற்கும் பொருள் மாறுபடுகின்றது.
                               
       ஐந்தாம் வேற்றுமை:
 உதாரணம்:   மதுரையின் மேற்கு கோவை.
                               மலையின் வீழ் அருவி.
ஆறாம் வேற்றுமை:
உதாரணம்:   கண்ணன் வீடு
                               கண்ணனது வீடு.
              இதில் முதல் வாக்கியத்திற்கும் , இரண்டாம்  வாக்கியத்திற்கும் பொருள் மாறுபடாது அது என்னும் இடைச்சொல் வந்துள்ளது.
ஏழாம் வேற்றுமை:
                          உதாரணம்:   பள்ளியின் கண்  கல்வி பயில்.
                            தமிழின் கண் இனிமை உண்டு.
 எட்டாம் வேற்றுமை:
                          உதாரணம்:   வேலாவா!
                             தம்பீ .. ..
-          இதில் விளி  என்னும் (விளி- அழைத்தல்)  இடைச்சொல் வந்துள்ளது.

விகுதிகள்: ஆன் ஆள், அள், உம், து, கள் , ஏன்,தல்  போன்றன வரும்.
            உதாரணம்:
·         தம்பி வந்தான்.
·         மலர்விழி வந்தாள்.
·         பூனை  வந்தது.
·         நான் பேசினேன்.
·         நன்றாக பேசுதல்.

                                                                                        
இடைநிலை:  
இறந்தகால இடைநிலை: த், ட், ற், ன்.
               உதாரணம்:
·         பாடம் படித்தேன்.
·         பாடல் கற்றேன்.
·         அவன் வந்தான்.                             
நிகழ்கால இடைநிலை: கிறு , கின்று, ஆநின்று.
        உதாரணம்: 
·         பாப்பா அழுகிறது.
·         நான் படிக்கிறேன்.
·         அவர்கள்   படிக்கின்றார்கள்.
எதிர்கால இடைநிலை: ப், வ்.
               உதாரணம்:   
·         பாடம் படிப்பேன்.
·         நாளைச் செய்வேன்.
சாரியை:  அன் ,அம், அத்து, அற்று, இன் முதலியன  சாரியை .
மரத்தை = மரம்+ அத்து+ஐ
சிலவற்றை = சில+ அற்று+ஐ
புளியங்காய்= புலி+அம் +காய்
வந்தான்= வா+த் ந் +அன்+அன்
தத்தம் பொருள் உணர்த்திவரும் இடைச்சொற்கள் ஏ, , உம், தோறும், தான், என, என்று போன்ற சாரியையும் நாம் பயன்படுத்துகிறோம்.



                            உரிச்சொல்:    
உரிச்சொல் என்பது ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல். (உரி+சொல் ஒன்றிக்கு உரிமை உடைய சொல்)
·         ஒரு சொல்லானது பலபொருள் தருவதாகவும்,
·         பல சொல் ஒரு பொருள் தருவதாகவும் அமைவது உரிச்சொல்.
இது, பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ வரும்.  பெயருக்கும், வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
உரிச்சொல் வகைகள்: ஒரு பொருள் குறித்த பலஉரிச்சொல்
                           பல பொருள் குறித்த ஓர் உரிச்சொல்.
ஒரு பொருள் குறித்த பலஉரிச்சொல்:
·         சாலப் பேசினான்.
·         உறு புகழ்.
·         தவ உயர்ந்தன.
·         நனி  தின்றான்.

              -இந்த நான்கிலும் வரும் "சால, உறு, தவ, நனி என்னும்                    உரிச்சொற்கள் "மிகுதி" என்னும் ஒரே பொருளை உணர்த்துவன ஆகும்.
             பல பொருள் குறித்த ஓர் உரிச்சொல்:
·         கடிமனை - காவல்
·         கடிவாள்     - கூர்மை
·         கடிமிளகு   - கருப்பு
·         கடிமலர்    - சிறப்பு
                      -இந்த நான்கிலும் வரும் "கடி" என்னும் உரிச்சொல்   "காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களை உணர்த்துகின்றன.



-           
                                                            


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக