வல்லினம் மிகா இடங்கள்:
1. படி என
முடியும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.
கேட்கும்படி+ கூறினான்= கேட்கும்படி கூறினான்.
வரும்படி+சொன்னான்= வரும்படிசொன்னான்.
2. இரட்டைக்கிளவி
மற்றும் அடுக்குத்தொடரில் வல்லினம் மிகாது.
சல+சல= சல சல
சர + சர= சர சர
பாடு+ பாடு =பாடு பாடு
செய் +செய்= செய் செய்
3. எட்டு, பத்து தவிர மற்ற
எண்களில் பின் வல்லினம் மிகாது.
ஒன்று+கொடு= ஒன்று கொடு
இரண்டு+ பேர்= இரண்டுபேர்.
4.அவை,
இவை,
எவை,
அன்று,
இன்று,என்று என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
அவை+ போயின= அவை போயின.
இன்று+ படித்தான்= இன்று படித்தான்
5. அங்கே, இங்கே, எங்கே என்னும் சொற்களின்
பின் வல்லினம் மிகாது.
அங்கே+ பார்= அங்கே பார்.
எங்கே+ சென்றாய்= எங்கே சென்றாய்
6. ஆ, ஏ, ஓ, யா எனும் வினா எழுத்துகளின்
பின் வல்லினம் மிகாது.
நீயா+ கூறினாய்= நீயா கூறினாய்.
அவளா + படித்தால்= அவளா படித்தால்
7. சிறிய ,பெரிய எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
சிறிய+புத்தகம்= சிறிய புத்தகம்
பெரிய+
புத்தகம் = பெரிய
புத்தகம்
8. இரண்டாம்
வேற்றுமை தொகை மறைந்து வரும் போது வல்லினம்
மிகாது.
தமிழ்+கற்றான்= தமிழ் கற்றான்.
நீர்+குடித்தான்= நீர்குடித்தான்
வந்தது + பேருந்து=
வந்தது பேருந்து
சென்றன + காகம்= சென்றன காகம்
10. ஈறு கெடாத
எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வலி மிகாது.
ஓடாத + குதிரை = ஓடாத
குதிரை
பாடாத+ புலவர் = பாடாத புலவர்.
11. ஆறாம் வேற்றுமை
விகுதியில் வலி மிகாது. (அது)
எனது+ கை= எனது கை
அவளது+ புத்தகம் = அவளது புத்தகம்
12. உம்மைத்தொகையில்
வல்லினம் மிகாது.
உம்மைத்தொகை: "உம்"
என்ற உருபு மறைந்து வருவது உம்மைத்தொகை.
தாய்+தந்தை= தாய்தந்தை
இரவு+பகல் - இரவு பகல்
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
13.மென்
தொடர் குற்றியலுகரத்தின்
பின் வல்லினம் மிகாது.
குற்றியலுகரம்
: குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.
பந்து (த்+உ) - மென்தொடர் குற்றியலுகரம்.
மெல்லின எழுத்துகளை
தொடர்ந்து வந்து குறைந்து ஒலிக்கக்கூடிய உகரம்
மென்தொடர் குற்றியலுகரம்.
உதாரணம்:
கரும்பு
+ தின்றான் = கரும்புதின்றான்
நடந்து+சென்றான் = நடந்துசென்றான்.
14.
வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் கள், தல் விகுதி வரும்போது வல்லினம் மிகாது.
வன்தொடர்
குற்றியலுகரம்:
வல்லின எழுத்துகளை
தொடர்ந்து வந்து குறைந்து ஒலிக்கக்கூடிய உகரம்
வன்தொடர் குற்றியலுகரம்.
உதாரணம்:
சொத்து+ கள்=
சொத்துகள்
வாழ்த்து+ கள்
= வாழ்த்துகள்
15. விளிப்பெயர் பின்னும் வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம்
மிகாது.
உதாரணம்:
தம்பீ+ போ
= தம்பீ போ
மழையே + செல்
= மழையே செல்
வாழ்க +பெரியார்
= வாழ்க பெரியார்
வீழ்க +கொடுமை
= வீழ்க கொடுமை
16.வல்லின
றகர , டகரத்தின் பின் ஒற்று வராது.
உதாரணம்:
கற்க- கற்க்க
பயிற்சி - பயிற்ச்சி
திராட்சை -
திராட்ச்சை
வெட்கம் - வெட்க்கம்
மாடு+ பாய்ந்தது = மாடு பாய்ந்தது
நாய்+ போனது = நாய் போனது
கொக்கு+ பறந்தது = கொக்கு பறந்தது. -எழுவாய்த்தொடர்
வள்ளி + படித்தான்= வள்ளி படித்தான்
விரி+கடல்= விரி கடல்
ஊறு+காய்= ஊறுகாய் -வினைத்தொகை
18. பெயரெச்சங்கள் பின்னும் , வினையெச்சத்தின் பின்னும் வல்லினம் மிகாது.
செய்த + பழம்= செய்த பழம்
நின்ற+ பசு= நின்ற பசு -பெயரெச்சம்
செய்து+ பார்த்தான்= செய்து பார்த்தான்
நின்று+ சென்றான்= நின்று சென்றான். -வினையெச்சம்