செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

கிராமத்து விடுமுறை

கிராமத்து விடுமுறை !!

வானில்  ஞாயிறு 
உதிக்குமுன் வயலில் 
நாற்றெடுக்கும் 
தந்தையோடு ,,...

சேற்றில் அழகாய் 
குளியல் போட்டு,.. 

வாய்க்கால் வழியே 
வளைந்தோடும் 
நீரில் மூழ்கி 
நீச்சல் போட்டு,,....

உருண்டை சோற்றை 
அம்மா ஊட்டிய 
உல்லாச விடுமுறை  அது...

உயர்ந்த பனையின்
காயை உறிச்சி குடித்து 
உருண்டை வண்டி ஓட்டி 
சென்ற தருணம் அது....

பனை ஓலை  காற்றாடி 
பறக்க ரசித்த வயது  அது ..

விண்மீன் ஒளிவீச 
தெருவிளக்கில் 
அரங்கேற்றம் நிகழ்த்திட்ட 
களைப்பில் தாய்மடியில் 
தலைவைத்துறைக்கும் 
விடுமுறை ....!!







சனி, 16 பிப்ரவரி, 2019

கணினி காதலன்

மனைவி சிரம் சாய்க்கும்
மடியது  மடிக்கணினிக்கே 
சொந்தமென்றாய் .....

குழுவாய் கூடியமர்ந்து 
கொண்டாடும் வேளையிலும்
Group Call என்று தனியறை 
 செல்கின்றாய் ....

எல்லாவற்றையும் 
உன்னிடம் பேச 
நினைத்தாலும்
Edit செய்து பேச 
சொல்லி கேட்கின்றாய் .....

காதோரம் காதல் 
கதை பேச முயற்சிக்க 
செவியிரண்டும்
Headphone கே
சொந்தமென்றாய் ...

நான்  சொன்ன 
 Joke கிற்கு  நகைத்தாய் .
என நினைத்து எப்படி 
இருந்ததென வினவ,  
Chat ல்  நல்ல  comment
எச்சொல்லி  மகிழ்த்தாய்...

தினம் தினம் 
Keyboardல் விளையாடும் 
உன் விரல்கள்  
கிச்சி கிச்சி  
விளையாடும் 
நேரம்தான் வருமா ?

 Monitorல் 
விழி புதைத்த 
உன் பார்வை 
இப்பாவையின் மீது 
படுமா ?



வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

காதல் வாழ்க !

காதல் வாழ்க ! 

மானுடர் சிலர் 
சிதைத்தாலும் 
மண்ணில் வேராய் 
மனமதை 
புதைத்திருக்கும் 
மரத்தின் 
காதல் வாழ்க !

தென்றல் மெய்ப்பட 
பஞ்சு இதழால் 
கொஞ்சி சிரிக்கும் 
எழில் மலரிடம் 
தேனீக்கொள்ளும்
காதல் வாழ்க !
  
நிமிடத்தில்   பலமுறை 
கரைதீண்டிச்  செல்லும் 
நீலக்கடலை 
காற்றுடன் கொண்ட 
காதல் வாழ்க !

நீலமேக   கூட்டத்தில் 
நித்தம் மோகம் 
தாரகையின் 
காதல் வாழ்க !

நாட்கள் பல 
நாணத்தால் நின்று 
திங்களில்  ஓர்முறை 
முகம்காட்டும் 
திங்களிடம் தங்களின் 
காதல் வாழ்க !

கார்மேகம் கண்சிமிட்டி 
மழையாய்  மண்ணிற்கு 
முத்தமிடும் கார்மேக 
காதல் வாழ்க !

தன வரவை எதிர்நோக்கும் 
வறண்ட ஆற்றிடம் 
மழை கொண்ட 
காதல் வாழ்க !

இயற்கையின் 
காதல் வாழ்க !

இயற்கையை 
காதலிக்கும் 
காதலர் வாழ்க !!