அம்மா
பத்து மாதம் பத்திரமாய்
சுமந்து உன்னதமாய்
உலகிற்களித்தவள் ....
தனது குருதியை
இறுதி வரை தந்து காப்பவள்...
நமக்கு உயிரை தந்தவள்
நம்மிடம் உயிராய் இருப்பவள் ...
அன்பளிக்கும்
அட்சயப்பாத்திரமவள் ..
அவள்மடிசாய சொர்க்கமதை
காண்பித்தவள் ...
பத்து மாதம் கருவறையில்
இடமளித்த அவளை
பத்திரமாய் சுமப்போம்
இறுதி வரை
இதய அறையில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக