திங்கள், 7 ஜனவரி, 2019

அக்கரைப் பச்சை

அக்கரைப் பச்சை 

உறங்கவிடாமல் கண்முன் நின்ற 
கனத்தை நினைவாக்க 
கண்களாய்  இருக்கும் 
பிள்ளைகளின் 
எதிர்காலமதை வளமாக்க 

வளம் சேர்க்க 
நினைத்தபோது எண்ணினேன்,
அதற்கு ஏற்றது
வளர்த்து வரும் நம் தாய்நாடு அல்ல ,
வளர்ச்சியடைந்த அயல்நாடு என்று...

தாய் நாட்டில்  இருந்தபோது 
ஆண்டிற்கு ஒருமுறையும்  
கண்டிறாத   உறவும்கூட 
அடிக்கடி நினைவில் 
ஆடுகிறது அயல்நாடு வந்த பிறகு ... 

அதிகாலை சன்னல் வழிவரும் 
ஆதவக்கதிர்  என்துயில் கலைக்க 
விழிதுடைத்தெழுந்தேன் 

பிறகு அறிந்தேன் 
நம் தாய் நாட்டின் சொர்க்கம் அல்ல 
அயல் நாட்டில் சொப்பனம் என்று,...

பிள்ளை சரும நோயால்
சிரமப்படுகையில் உணர்ந்தேன், 

இயற்கையாய் ஊட்டச்சத்தை 
அள்ளித்தரும்  ஞாயிறு  
நாள்தோறும் உதிக்கும் 
நம் தாய்நாடு  அல்ல,,..

மனித கரத்தால் பிடிக்க முடியாத 
ஆதவனை புட்டியில் 
ஊட்டச்சத்தாய் (வைட்டமின் டி )
அடைத்துவிற்கும் அயல்நாடு  என்று....

பலவண்ண  இலை கொண்ட 
மரத்தின் நிழலில் 
பலர் நிழற்படம் எடுத்தபோது 
நினைத்தேன்,

இளம்பச்சை இலையது 
கரும்பச்சை நிலைகண்டு,
இலைமுற்றி, பால்வற்றி,
இளமஞ்சள் நிறம்தொட்டு, 
சருகாய் தரை தீண்டும்
நம்தாய் நாடு  அல்ல ..

பகலவன் பார்வையின்றி, 
பச்சயம்வற்றி, 
ஒளிச்சேர்க்கை நிகழ்த்தாமல் 
பட்டினியால் வாடி
வதக்கும் வலியதை 
அழகென பார்த்துரசிக்கும் 
அயல்நாடு என்று .....

"அக்கரைக்கு  இக்கரைப்பச்சை "




புத்தாண்டு மலரட்டும்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 

நினைத்தவை நிறைவேறி 
எண்ணங்கள் ஜெயமாக 
புத்தாண்டு மலரட்டும் .....

ஏற்றம்போல் வாழ்வுக்கண்டு 
எல்லையற்ற இன்பம்காண 
இனிமையாக
புத்தாண்டு மலரட்டும்...

பாசத்துடன் நேசம்கலந்து 
பண்பாட்டை  வளர்க்கும் 
புத்தாண்டு மலரட்டும்...

நாகரீக உதயத்தில் 
பாரம்பரியம் மறையாதிருக்கும் 
புத்தாண்டு மலரட்டும்...

உள்ளம் மகிழ உடல் 
உரம்பெறும் 
உடலிலும் உள்ளத்திற்கு 
உரமளிக்கும் 
புத்தாண்டு மலரட்டும் ..

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 

மண்தோட்டமாம் 
மாணவர் மனத்தோட்டம் 
இலக்கை வித்தாக்கி 
வித்தை விருச்சமாக்கும் 
வித்தகர் --- ஆசிரியர். 

ஆதவா கதிரால் ஒளிவீசும் 
விண்மீன் போல் 
ஆசான் மதிக்கரம் 
அறிவைத்தட்டி எழுப்ப 
விண்மீனாய்  ஒளிவீசும் 
மாணவனை பலரில் 
ஒருவராய் 
பார்த்து ரசிப்பவர் -- ஆசிரியர்.

மாணவர் அகத்தில் 
மறைத்திருக்கும் 
பல்துறை வாதிகளை 
பார்ப்புகழ  வைப்பவர் -- ஆசிரியர்.

அம்மா

அம்மா 

பத்து மாதம் பத்திரமாய் 
சுமந்து உன்னதமாய் 
உலகிற்களித்தவள் ....

தனது குருதியை 
இறுதி வரை தந்து காப்பவள்...

நமக்கு உயிரை தந்தவள் 
நம்மிடம் உயிராய்  இருப்பவள் ...

அன்பளிக்கும்  
அட்சயப்பாத்திரமவள் .. 
அவள்மடிசாய சொர்க்கமதை 
காண்பித்தவள்  ...

பத்து மாதம் கருவறையில் 
இடமளித்த  அவளை 
பத்திரமாய் சுமப்போம் 
இறுதி வரை
இதய அறையில் ...