அளிக்க பெருகும்
அழியாத செல்வமதை
அள்ளித்தந்து
அறிவின் தெளிவதை
அறியுங்கால்
ஆனந்தமடையும்
அனைத்து ஆசிரியர்களுக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துகள்.
💐💐💐
- உமா வினோ.
அளிக்க பெருகும்
அழியாத செல்வமதை
அள்ளித்தந்து
அறிவின் தெளிவதை
அறியுங்கால்
ஆனந்தமடையும்
அனைத்து ஆசிரியர்களுக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துகள்.
💐💐💐
- உமா வினோ.
விடை வகைகள்
வகை விடைகள்
வினவப்படும் வினாவிற்கு விடையளிக்கும் முறை எட்டு வகையில் அமைந்துள்ளன.
1. சுட்டு விடை (சுட்டி விடையளித்தல்)
2. மறை விடை(எதிர்மறை)
3. நேர்விடை(உடன்பாடு)
4. ஏவல் விடை
5. வினா எதிர் வினாதல் விடை
6.உற்றது உரைத்தல் விடை
7. உறுவது கூறல் விடை
8. இனமொழி விடை
1. சுட்டுவிடை (சுட்டிவிடையளித்தல்)
கேட்கப்படும் வினாவிற்கு சுட்டி விடையளிப்பது சுட்டு விடை ஆகும்.
உதாரணம்: இங்கு பழக்கடை எங்குள்ளது?
என்ற வினாவிற்கு அதோ(அ)இதோ உள்ளது என்று சுட்டிக் கட்டி விடையளிப்பது சுட்டுவிடை.
2. மறை விடை:
கேட்கும் வினாவிற்கு எதிர்மறைப் பொருளில் விடையளித்தால் அது மறை விடை .
உதாரணம்: நீ கடைக்குச் செல்வாயா? இதற்கு நான் செல்லமாட்டேன், என்று விடையளித்தால் அது மறை விடை.
3.நேர் விடை:
கேட்கும் வினாவிற்கு உடன்பாட்டுப் பொருளில் விடையளித்தால் அது நேர்விடை.
உதாரணம்: நீ கடைக்குச் செல்வாயா?
இதற்கு நான் செல்லவேன். என்று விடையளித்தால் அது நேர் விடை.
4. ஏவல் விடை:
கேட்கும் வினாவிற்குக் கேட்பவரையே ஏவுதல் ஏவல் விடை ஆகும்.
உதாரணம்: நீ கடைக்குச் செல்வாயா?
என்ற வினாவிற்கு நீயே செல் என்று விடையளிப்பது ஏவல் விடை.
5. வினா எதிர் வினாதல் விடை:
கேட்கப்படும் வினாவிற்கு விடையாக மீண்டும் வினாவை கூறுவது வினா எதிர் வினாதல் விடை .
உதாரணம்: நீ கடைக்குச் செல்வாயா?
இதற்கு செல்லாமல் இருப்பேனா? என்று மீண்டும் வினாவையே விடையாக கூறுவது. வினா எதிர் வினாதல் விடை.
6. உற்றது உரைத்தல் விடை:
கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நேர்ந்ததை(உற்றதை) விடையாக கூறுவது உற்றது உரைத்தல் விடை.
உதாரணம்: நீ நடந்து வருகிறாயா?
என்ற வினாவிற்கு எனக்கு கால் வலிக்கிறது. என்று தனக்கு உற்றதைக் கூறுவது.
7. உறுவது கூறல்:
கேட்கும் வினாவிற்கு தனக்கு நிகழப்போவதை விடையாகக் கூறுவது.
உதாரணம்: நீ நடந்தே பள்ளிக்கு செல்வாயா?
இதற்கு பதிலாக எனக்கு கால் வலிக்கும் என்பதை விடையாக கூறுவது உறுவது கூறல்.
8. இனமொழி விடை:
வினவும் வினாவிற்கு இனமான வேறொன்றினை விடையாகக் கூறுவது.
உதாரணம்: நீ ஆடுவாயா?
இதற்கு பாடுவேன் என்று விடையளித்தல் இது இனமொழி விடை.
அறுவகை வினா
ஒன்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்காகவே ஒருவரை ஒருவர் வினவுவது வினா. அப்படி வினவும் வினாக்கள் ஆறு வகைப்படும்.
1. அறிவினா:
தாம் அறிந்த (தெரிந்த) ஒன்றை மற்றவரும் அறிந்துள்ளனரா என்பதை அறிந்து கொள்வதற்காக கேட்கப்படும் வினா அறிவினா.
உதாரணம் : ஓடி விளையாடு பாப்பா பாடலை எழுதியர் யார்?
இதற்கான விடையை ஆசிரியர் தெரிந்திருந்தும் மாணவர் அறிந்துள்ளனரா? என்பதை அறிந்துகொள்வதற்காக கேட்கப்படுவதால் இது அறிவினா.
2. அறியா வினா:
தாம் அறியாத ஒன்றை மற்றவரிடம் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கேட்கப்படும் வினா அறியா வினா.
உதாரணம்: ஐயா, இந்தப் பாடலின் பொருள் என்ன?
மாணவர், தாம் அறியாத ஒன்றை, ஆசிரியரிடம்(மற்றவரிடம்) கேட்டு அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்கப் பட்டதால் இது அறியா வினா ஆகும் .
3. ஐயா வினா:
தனக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தை (சந்தேகத்தை) அகற்றிக்கொள்ளும் பொருட்டுக் கேட்கப்படும் வினா ஐயவினா.
உதாரணம்: மேலே பறப்பது பருந்தா? காகமா?
ஐயத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டுக் கேட்கப் பட்டதால், இது ஐயா வினா.
4. கொளல் வினா:
ஒன்றினை மற்றவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பொருட்டு கேட்கப்படும் வினா கொளல் வினா.
உதாரணம்:
புத்தகக் கடைக்குச் சென்று திருக்குறள் புத்தகம் உள்ளதா? எனக் கேட்டல்.
புத்தகம் இருப்பின் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்டதால் இது கொளல் வினா.
5. கொடை வினா :
ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்கப்படும் வினா கொடை வினா.
உதாரணம் : ஆசிரியர், மாணவனை நோக்கி உன்னிடம் எழுதுகோல் உள்ளதா? எனக் கேட்டல்.
மாணவனிடம் இல்லை என்றால் கொடுக்கும் நோக்கில் கேட்கப்பட்டதால் கொடை வினா.
6. ஏவல் வினா:
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்காக வினவும் வினா.
உதாரணம்: கண்ணா, கடைக்குச் சென்று பழங்கள் வாங்கி வருவாயா?
இங்கு , கண்ணனை கடைக்குச் சென்று பழங்கள் வாங்கி வருமாறு கேட்கப்படுவதால் இது ஏவல் வினா.
வாக்கிய வகைகள் அறிதல்
சொற்கள் தொடர்ந்து நின்று ஒரு கருத்தை வெளிப்படுத்துமானால் அது வாக்கியம் எனப்படும்.
கருத்து அடிப்படையிலும்,
அமைப்பு அடிப்படையிலும்
வினை அடிப்படையிலும் மூன்று வகைகளாக அமைகின்றன.
I. கருத்து அடிப்படியில் அமைந்த வாக்கியங்கள் :
ஒரு செய்தியை தெளிவாக கூறும் வகையில் அமைந்த வாக்கியம் செய்தி வாக்கியம் ஆகும்.
உதாரணம்: உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது.
ஒருவர்க்கு ஒரு கட்டளை விடுவதாக அமைந்திருக்கும் , வேர்ச்சொல்லைக் கொண்டு கொண்டு முடிந்து இருக்கும் வாக்கியம் கட்டளை வாக்கியம்
உதாரணம்: உடற்பயிற்சி செய்.
நீ நன்றாக படி .
3. உணர்ச்சி வாக்கியம்:
நமக்கு ஏற்படுகின்ற உவகை, அவலம், வியப்பு , அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமையும் வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்.
ஆச்சரியக்குறி (!)இடம் பெற்றிருக்கும்.
இந்த வாக்கியத்தில் ஆ, என்ன , என்னோ , அந்தோ,
ஆகா போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
உதாரணம் :
ஆகா ! என்ன வானவில்லின் அழகு.
ஆ! தமிழக மக்கள் அனைவரும் எழுத்தறிவு பெற்றனரே.
4. வினா வாக்கியம்
வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம். இவ்வகை வாக்கியங்களில் வினாக்குறி இருக்கும். வினா பொருளை உணர்த்தும் எழுத்துகளும் வரும்.
வினா பொருளை உணர்த்திடும் எழுத்துகள் : ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.
உதாரணம் :
இது சென்னைக்கு செல்லும் வழியா?
நீ மனிதனா? - ஆ
நீ தானே? - ஏ
உளரோ? - ஓ
1. தனி வாக்கியம் :
தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பெற்று ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும்.
உதாரணம்:
மலர்விழியும், கயல்விழியும் வரைந்தனர்.(
ஒரு எழுவாய் ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்று வரும் வாக்கியம் ஆகும்.
உதாரணம்:
கண்ணன் நன்கு படித்தான்; வெற்றி பெற்றான்; பரிசு பெற்றான்.
கீதா படம் வரைந்தாள்; வண்ணம் தீட்டினாள்; போட்டியில் வென்றாள்.
ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல துணை (சார்பு)
வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்.
என்னும், என்றும் , ஓ, ஆல் என்ற இணைப்புச் சொற்கள் வரும்.
திருக்குறளை ஆழ்ந்து படித்து, அதன் படி நடந்து , வாழ்க்கையில் முன்னேற
அனைவரும் முயல வேண்டும்.
III. வினை அடிப்படியில் அமைந்த வாக்கியங்கள் - 3
செய்வினை வாக்கியம்:
செயப்பாட்டுவினை வாக்கியம்:
கதை பாட்டியால் கூறப்பட்டது.
செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுவது எப்படி?
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினர். (செய்வினை வாக்கிம்)
எழுவாய் செயப்படுபொருள் பயனிலை
படி 1: செயப்படுபொருளில் உள்ள ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை எழுத்தை நீக்க வேண்டும். (ள் +ஐ = ளை)
திருக்குறள்
படி 2: செயப்படுபொருளை எழுவாக மாற்ற வேண்டும்.
திருக்குறள்
படி3: எழுவாயை செயப்படுபொருளாக மாற்றி அதனுடன் ஆல் என்ற விகுதியை சேர்க்க வேண்டும். (ர்+ஆல் - ரால்)
திருக்குறள் திருவள்ளுவரால்
படி 4: பயனிலையோடு படு, பட்டது என்ற விகுதிகளை சேர்த்து எழுத வேண்டும்.
திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது.
(செயப்பாட்டுவினை வாக்கியம்)
தன்வினை வாக்கியம்:
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
உதாரணம்:
தாய் உணவை உண்டாள்.
கலையரசி பாடம் கற்றாள
பிறவினை வாக்கியம்:
ஒரு எழுவாய், ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால், அது பிறவினை வாக்கியம் ஆகும்.
உதாரணம்:
தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.
கலையரசி பாடம் கற்பித்தாள்.
விதி1: தன்வினை பகுதியில் உள்ள மெல்லின மெய்யை , வல்லின மெய்யாக மாற்ற வேண்டும்.
திருந்தினான் - திருத்தினான்
விதி 2: தன்வினை பகுதியிலுள்ள வல்லின மெய் இரட்டித்து வரும்.
ஓடினான் - ஓட்டினான் (பகுதி -ஓடு - ஓட்ட )
விதி :3 தன்வினை பகுதிகளுடன் வி, பி என்னும் விகுதிகளில் ஒன்று சேர்ந்து வரும்.
தேடினான் - தேடுவித்தான் (பகுதி : தேடு)
உண்டாள் - உண்பித்தாள் (பகுதி: உண்)
விதி:4 தன்வினை பகுதிகளுடன் கு, சு, டு, து, பு, று என்னும் விகுதிகளில் ஒன்று சேர்ந்து வரும்.
போனான்- போக்கினான்
உதாரணம்:
தன்வினை – பிறவினை
ஆடினாள் – ஆட்டுவித்தாள்
திருந்தினான் – திருத்தினான்
தேடினான் – தேடுவித்தான்
பயின்றான் – பயிற்றுவித்தான்
ஒருவர் கூறிய செய்தியை அப்படியே பொருள் மாறாமல் அவர் கூறியபடியே கூறுவது நேர்க்கூற்று.
நேர்க்கூற்று வாக்கியத்தில் இரட்டை மேற்கொள் குறியீடு (" ") இட வேண்டும்.
தன்மை , முன்னிலை, படர்க்கை இடங்களில் வரும்.
உதாரணம்:
"நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று செல்வி தோழியிடம் கூறினாள்.
அயற்கூற்று வாக்கியம்:
ஒருவர் கூறிய செய்தியை அப்படியே கூறாமல் , அயலார்(மற்றவர்) கூறுவது போல கூறுவது அயற்கூற்று வாக்கியம்.
அயற்கூற்று வாக்கியத்தில் மேற்கோள் குறியீடு இடம்பெறாது.
உதாரணம்:
தான் புத்தகம் கொண்டு வருவதாக செல்வி தோழியிடம் கூறினாள்.
நேர்க்கூற்று அயற்கூற்று
இது, இவை, இன்று அது, அவை, அன்று
இப்பொழுது, இதனால் அப்பொழுது அதனால்
நாளை மறுநாள்
நேற்று முன்னாள்
நான், நாம், நாங்கள் தான், தாம்,தாங்கள்
நீ அவன், அவள்
பகுபத உறுப்பிலக்கணம்
பதம்
- ஒரு எழுத்தோ அல்லது சொல்லோ தொடர்ந்து வந்து பொருள் தருவது பதம். (சொல், அல்லது வார்த்தை, சொற்றொடர், மொழி)
கை,
வா, நீ, தீ- ஓரெழுத்து ஒருமொழி
பகுபதம்-
பகு- பிரிக்க முடிந்த / பகுக்க முடிந்த சொற்கள்
பகா
பதம் - பகா- பிரிக்க முடியாத
/ பகுக்க முடியாத சொற்கள்
பகாபதம்
- பிரிக்க முடியாத சொற்கள்
பகுதி, விகுதி என பிரிக்க முடியாத சொற்கள் பகாபதம்.
பகாப்பதம் நான்கு வகைப்படும் .
அவை:
பெயர்ப்பகாபதம்
- மரம், நாய், நீ, தீ
வினைப்பகாபதம்
- உண், காண், எடு, ஓடு
இடைப்பகாபதம் - போல்,மன், பிற
உரிப்பகாபதம்
- சால ,நனி தவ
பகுபதம்-
பிரிக்க கூடிய சொற்கள்.
பகுதி
விகுதி
இடைநிலை
சந்தி
சாரியை
விகாரம்
பகுதி: ஒரு
பகுபதத்தின் முதலில் வரும்
சொல் பகுதி. இது கட்டளை சொல்லாகவே
வரும்.எனவே இதனை முதனிலை, வேர்ச்சொல், அடிச்சொல் என்றும்
கூறுவர் .
பார்த்தான் -பார்
படித்தான் - படி
நடந்தான் –
நட
அன், ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
ஆள்- பெண்பால் வினைமுற்று விகுதி
க - வியங்கோள் வினைமுற்று விகுதி
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
இ - வினையெச்ச விகுதி
அ -
முதல்
நிலைக்கும்(பகுதி) , இறுதி நிலைக்கும் (விகுதி) இடையில் வரக்கூடியது இடைநிலை. இது காலம் காட்டுவதாக
அமையும்.
கடந்த காலத்தில் த், ட் ,ற் ,ன் என்பவை இடைநிலைகளாக வருகின்றன.
கிறு, கின்று, ஆநின்று என்பவை நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள் ஆகும்.
ப், வ், என்பவை எதிகாலத்திற்குரிய இடைநிலைகள் ஆகும்.
விகுதிக்கும்
,இடைநிலைக்கும் இடையில்
வரும். சாரியை= சார்ந்து நிற்பது. தனக்கென பொருள் எதுவும் இல்லாமல் மற்ற உறுப்புகளுடன் இணைந்து
வரும்.
பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் வரும். இது பகுதியும் இடைநிலையும் இணையும் பொது அவற்றை இணைக்க வருவது சந்தி (புணர்ச்சி)
விகாரம் என்று தனி உறுப்பு இல்லை.
பகுதியும் சாந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும்
மாற்றம் அடையலாம். அவ்வாறு மாற்றம் அடைந்து வருவது விகாரம்.
காலங்கள்
ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகியது என்பதைக் குறித்துக் காட்டும் இலக்கணக் கூறு காலம் ஆகும். ஒரு செயல் பேசப்படும் நேரத்திற்கு முன்னரா, அல்லது அதே நேரத்திலா அல்லது பின்னரா என்று குறித்து காட்டுவது காலம்.
காலம் மூன்று வகைகளாக உள்ளன. அவை
ஒரு
வாக்கியத்தில் வினைச்சொற்கள் காலம் காட்டுவதாக அமைகின்றன.
- எனக்கு புத்தகம் பிடிக்கும்.
- இது அழகான பூ.
மேலுள்ள இரண்டு வாக்கியங்களில் வினைச்சொற்கள் இல்லை. எனவே, இவை எந்த காலம் என்பதை நம்மால் தெளிவாக சொல்ல இயலாது. எனவே, ஒரு வாக்கியம் எந்த காலத்தை சேர்ந்தது என்பதைக் கண்டறிய வினைச்சொற்கள் மிக அவசியம் ஆகின்றது.
இறந்த
காலம்/ கடந்த காலம்:
ஒரு
செயல் நடந்து முடிந்ததைக் குறிக்கும் காலம் கடந்த காலம் / இறந்த காலம். கடந்த காலத்தில் த், ட் ,ற்
,ன் என்பவை
இடைநிலைகளாக வருகின்றன. வினைச்சொற்கள்
காலம் காட்டுவதாக அமையும்.
உதாரணம்: நான்
கடைக்குச் சென்றேன். (ற் +ஏ)
ஆசிரியர் பாடம் நடத்தினார்.(த்)
நிகழ்காலம் :
ஒரு செயல் நடந்துக்கொண்டிருப்பது
குறிப்பது நிகழ்காலம். கிறு,
கின்று, ஆநின்று என்பவை நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாக இருக்கும்.
உதாரணம்: கண்ணன் ஏணியில் ஏறுகிறான்.(கிறு)
சிறுவன் ஓடுகின்றான்.(
ஒரு செயல் இனி நடக்கப்போவதை குறிக்கும்
காலம் எதிர் காலம்.
ப், வ், என்பவை எதிகாலத்திற்குரிய
இடைநிலைகள் ஆகும்.
அம்மா கோவிலுக்கு செல்வார்.(வ் )