வல்லினம் மிகும் இடங்கள் .
ஓரெழுத்து ஒருமொழியின் பின் வல்லினம் மிகும்.
(மொழி= சொல்= கிளவி= வார்த்தை = பதம் )
சொல்= ஓர் எழுத்து தனித்து வந்தோ பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தருவது சொல்.
உதாரணம் :
தை+ திங்கள் = தைத்திங்கள்
ஈ+ சிறகு= ஈச்சிறகு
ஓரெழுத்து ஒருமொழி
கவசவில் நாலும் யவ்வில் ஒன்றும்
ஆம் நெடில் , நொ, து குறில் இரண்டோடு
ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின.
- நன்னூல் நூற்பா.
உயிர் எழுத்துகளில் 6 எழுத்துகள் தனித்து நின்று பொருள் தருகின்றன.
ஆ , ஈ, ஊ, ஏ, ஐ,ஓ
ஆ= பசு
ஈ= பறக்கும் உயிர், கொடுத்தல்
ஊ= இறைச்சி, உணவு
ஏ= அம்பு
ஐ= அழகு, தலைவன்
ஓ= மதகு(நீர் தாங்கும் பலகை- ஏரிக்கு உட்புறத்தில் ஈர் தேகத்தைக் குறைப்பதற்காக சதுரவடிவில் கட்டப்பட்ட தொட்டி)
ம வர்க்கத்தில் 6 எழுத்துகள் தனித்து நின்று பொருள் தருகின்றன.
மீ= மேல், விருப்பம்
மூ= மூப்பு(முதுமை), மூன்று
மே= மேலே, மென்மை
மை= மசி, கருமை(கண்மை)
மோ= மோதல்(முகத்தல்- நீர் முகத்தல் )
த வர்க்கத்தில் 5 எழுத்துகள் தனித்து நின்று பொருள் தருகின்றன.
தா= கேட்டல்,( வினவுதல் )
தீ = நெருப்பு
தை= தமிழ் மாதம்
தூ= தூய்மை, வெண்மை
தே= கடவுள், நாயகன்
ப வர்க்கத்தில் 5 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.
பா= பாடல், கவிதை
பூ= மலர்
பை= கைப்பை , பசுமை, அழகு
பே= அச்சம், மேகம்
போ= செல், நீங்கு.
ந வர்க்கத்தில் 5 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.
நா= நாக்கு
நீ= நீங்குதல், முன்னிருப்பவரைக் கூறுதல்
நே= நேயம், அன்பு
நை= வருந்துதல், சிதைவு
நோ = நோய், பலவீனம்
க வர்க்கத்தில் 4 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.
கா= சோலை, காத்தல் , கலைமகள்
கூ= கூப்பிடுதல், ஏலம்.
கை= உடல் உறுப்பு, ஒப்பனை
கோ= அரசன்
வ வர்க்கத்தில் 4 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.
வா= வருதல், அழைத்தல்.
வீ= மலர், பறவை
வை= வைத்தல், வைக்கோல், கூர்மை
வௌ= கவர்ந்து செல்லுதல்
ச வர்க்கத்தில் 4 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.
சீ= கிளறு, வெறுப்புச்சொல்.
சே= எருது, ஒரு வகை மரம்
சோ= மதில், அரண்
யா = ஒரு வகை மரம், கட்டுதல், ஐயம்.
நொ= வருந்து, துன்புறு