திங்கள், 30 ஜூலை, 2018

பேதை பெண் போதை கண்

பேதை பெண்ணினத்தை 
போதை கண்கொண்டு 
                                பார்பவனே

வளரும் மொட்டுக்களை
வதம் செய்யும்  வனவிலங்கே

பள்ளி செல்லும் இளம்பிஞ்சுகளை 
பறித்துண்ணும் பாழினமே

மாமாவென்றுனை  அழைத்த 
பெதும்பைக்கு மரண பரிசா ?? 

அன்னைமொழி சுமப்போம்

அந்நிய மொழியாம் 
"ஆங்கிலத்தை "
அரைகுறையாய் 
பேசுவதை நாகரீகத்தின் 
வளர்ச்சியென்றோம்...

செம்மொழியான
நம் தாய்மொழியாம்   
"தமிழை "
சிந்தையிலிருந்த 
மறந்தோம்...

மழலைமொழி மாறாத 
நம் மக்கள் 
அந்நிய  மொழி கற்க 
ஆர்வம் கொண்டோம் ...

ஆசியா  தொடங்கி 
அண்டார்டிக்கா வரை 
சென்றாலும் நாம் 
சிரிப்பதும்  சிந்திப்பதும்  
நம் தாய்மொழியில் 
என்பதை எண்ண மறந்தோம் ...

நாகரீக வளர்ச்சியில் 
நாமும் பயணிப்போம் 
அந்நியமொழி சுவைத்தாலும்  
அன்னைமொழியை 
சுமத்தவர்களாய் .....
"வாழ்க தமிழ் "       

சனி, 28 ஜூலை, 2018

உயிர் மூச்சு


காற்று

" காற்று"
உலக உயிர்கள்
சுவாசிப்பது 
உன்னால்

முற்றியஇலை தன்
பற்றினை  முறித்து
மண்ணிற்கு
முத்தமிடுவது
உன்னால்

முத்தமிட்ட இலை
மீட்டிய இசையில்
ஆல் விழுது  ஆடுவது
உன்னால்

அகன்ற   ஆழியின்
அலைகள்   உன்னால்

நான்  இப்பாவை
படைத்தும்   உன்னால்