புதன், 18 ஜனவரி, 2012

எனது முதல் படைப்பு - அன்னைக்கு சமர்ப்பணம்

பத்து மாதம் பத்திரமாய் சுமந்து  
உன்னதமாய் உலகிற்கு அளித்தவள்..

தனது குருதியை இறுதி
வரை தந்து காப்பவள்..

நமக்கு உயிரை தந்தவள்
நம்மிடம் உயிராய் இருப்பவள்..

தியாகம் செய்து வாழ்பவள்
தியாக சுடராய் ஒளிர்பவள்...

தாயின் அன்பில் நனைந்து பார்
அன்பின் அருமை தெரியும்..

இவ்வையத்தில் முதல்  கடவுள்
அவர்தம் அன்னை என்போம்...

                 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக