வெள்ளி, 15 நவம்பர், 2019

பணத்தை நேசிக்கதே மனத்தை நேசி - சிறுகதை

 பணத்தை நேசிக்கதே மனத்தை நேசி 

       அழகான  சிறிய  கிராமம், அதில்தன்  மனைவி ,மகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தார் விவசாயி  கிருஷ்னண். பசுமையான வயல்வெளி,நல்ல மகசூல்,பெருத்த லாபம்,சந்தோஷமான குடும்பம் என நாட்கள் கழிந்தன.

            கிருஷ்ணனின் வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி வந்து செல்வார்கள் ஏனென்றால் கிருஷ்ணன் பணத்தோடு நல்ல மனம் படைத்தவன் கேட்டவருக்கு கேட்கின்ற பொருள் உதவிகளை செய்து வந்தான்.


                
              தன்  வீட்டிற்கு வந்த நண்பர்கள், உறவினர்கள்,  வயலில் வேலைபார்க்கும் வேலையாட்கள்  என  அனைவரையும் நல்ல முறையில் உபசரித்து, வயிறார உணவளித்து வந்தான் கிருஷ்ணன்.

             மகிழ்ச்சியாக நாட்கள் சென்றுகொண்டிருந்த வேளையில்;
விரைவில் மகிழ்ச்சியான நாட்கள் எண்ணப்படப்போகிறது  என்று அறியாமல் விவசாயி கிருஷ்ணனின் குடும்பம் இருந்தது.

             சில மாதங்கள் கழிந்தன. பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லை. பயிர்கள் காய்ந்து கருகியது.இதனைப்பார்த்த விவசாயி மிகவும் வேதனைப்பட்டார். வருமானமும் குறைய ஆரம்பித்தது. வீட்டில் இருத்த உணவு பொருட்கள் அனைத்தும் குறைய ஆரம்பித்தது.அதே நிலை தொடர்ந்ததால் இறுதியில் ஒருநாள் சாப்பிட கூட உணவில்லாத நிலை வந்தது.  பணம் இருக்கும்போது வந்துசென்ற  உறவினர்கள் யாரும் வந்து கூட பார்க்கவில்லை. 
     
              விவசாயி கிருஷ்ணனின் மனைவி தன்னிடம் இருந்த 5 ரூபாயை தன்  மகளிடம் கொடுத்து ; கடைக்கு சென்று ரொட்டியாவது வாங்கி வா ... சாப்பிடலாம் என்றால் , கிருஷ்ணனின் மகள் கடைக்கு சென்று  5 ரூபாக்கு  கடைக்காரர் கொடுத்த 2 ரொட்டிகளை வாங்கி வந்து, தாயிடம் கொடுத்தாள்
இதில் இரண்டு தானே உள்ளது, உன் அப்பாவிற்கு ரொட்டி வேண்டும் அல்லவா , நீ கடைக்கு சென்று பணம் நாளை தருவதாக கூறி மேலும் ஒரு ரொட்டி வாங்கி வா என்று மகளை மீண்டும் கடைக்கு அனுப்பினாள்  கிருஷ்ணனின் மனைவி.





           அவளும் சென்று கடைக்காரரிடம் அண்ணா;  அம்மா இன்னொரு ரொட்டி வாங்கிட்டு வர சொன்னாங்க, நாளைக்கு ரொட்டி வாங்கும் போது  
பணத்தை சேர்த்து தருவதாக சொன்னாங்க; என்று கூறினாள்.

                  அதற்கு கடைக்காரர் இன்று ஒரு ரொட்டி வாங்கவே பணமில்லை 
நாளைக்கு மட்டும் "உங்களுக்கு பணம் மரத்துல இருந்து காய்கவா  போகுது"
"'பணம்  கொண்டு வா" ரொட்டி தருகிறேன். இப்ப "வீட்டுக்கு போ".என்று கூறி அனுப்பிவிட்டார்.

                 அந்த குழந்தையும் நடந்தவற்றை தன அம்மாவிடம் வந்து கூறியது இதனை கேட்ட கிருஷ்ணன் மிகவும் வருத்தப்பட்டார்.கண்களில் நீருடன் கிருஷ்ணனின்  மனைவி........
                   இரண்டு ரொட்டிகளை தன்  மகளுக்கு கொடுத்து பசியாற்றி, இரு குவளை  நீரை இருவரும் பருகிவிட்டு, தங்களின் முன்னாள் பசுமையான நினைவுகளை கண்முன் நிகழ்த்தியவாறு.... விட்டத்தை  பார்த்தவாறு படுத்திருந்தனர். தூக்கம் கண்களை தழுவியதோ  இல்லையோ கண்ணீரில் நீச்சல் பயிற்சி பெற்றிருந்தன அவர்களது கண்கள் ...பொழுதுதான்  விடிந்தது 
கிருஷ்ணனின் வாழ்க்கையில் விடியல் வருமா?
                                                     
                                                                                    
சிந்திக்க : 

                   * "காற்றுள்ள போதே தூற்றிக்கொள் "  என்ற பழமொழிக்கு ஏற்றவாறு கிருஷ்ணன் நடந்திருந்தால் அவருக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

                   *"சிறு துளி பெருவெள்ளம் " லாபம் வரும்போதே சிறிது எதிர்காலத்திற்காக சேமித்து  வைத்திருக்க வேண்டும். கிருஷ்ணனின் மனைவியாவது அதை எடுத்து கூறியிருக்க வேண்டும்.

                 *பணத்திற்காக இல்லாமல் கிருஷ்னனின் நல்ல மனத்திற்காகவாவது கடைக்காரர் ரொட்டி கொடுத்திருக்கலாம். பணம் இன்று வரும் நாளை போகும் மனம் அப்படி இல்லை என்பதை  கடைக்காரர் உணரவில்லை.
வாழ்க்கை சக்கரத்தில் கிருஷ்ணன் மீண்டும் பணக்காரன் ஆகலாம்.

                                                                                               -உமா வினோத்குமார்-