திங்கள், 19 நவம்பர், 2018

தாய்மை

அம்மாவென்று 
உனையழைக்க
கருப்பையில் 
உயிர் சுமக்கும்
காலமிது ....

இயல்பாகா
நீயிருக்க
இடையூறு
சிலவரினும்
இன்பமான நிலையிதை
இதயத்தில்
இருத்திவைக்கும்
நேரமிது .....

நின்மொழிதலுக்கு
மெய்யசைக்கும்
மொழியரியா
பிஞ்சின் பஞ்சு  பாதமது
அகத்தே அலைமோதும்
அக்கணம்  அடிவயிற்றில்
கரம்வைத்து கருப்பையில்
நிகழ்பவற்றை
கணிக்கின்ற
காலம் இது ....

உன்னுள்ளிருக்கும்
உயிரது
உன்னுடன் இருக்கும்
தினமதை
தினம் நினைத்து
களிப்புடன்
நாட்கள் கழிக்கின்ற
தருணம் இது ....

பெண்மைக்கு
உரித்தான
உடைமையது
உயிருக்குள்
உயிர்சுமப்பது ...

விலைமதிக்க
முடியா உணர்வது
"அம்மா "